குடியுரிமைச் சட்டத்தை அமலாக்குவதற்கான அரசாணையை மோடி அரசு வெளியிட்டு விட்டது, வீரம் செறிந்த ஒரு போராட்டம் மக்கள் விரோத, மத வெறி சட்டத்தின் அபாயங்களை மக்களிடம் எடுத்துச் சென்றது. கொரோனா தொற்று அரசுக்கு சாதகமாக அமைய போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனாலும் அரசுக்கு தெரியும், கனல் போல கோபம் உள்ளுக்குள் இருக்கும் என்று.
மோடிக்கு இது மோசமான நேரம். பொய்களை வைத்து மூன்றாவது முறையாக வெல்ல முடியாதென்று தெரிந்து விட்டது. உச்ச நீதிமன்றம் வேறு அசிங்கப்படுத்துகிறது. புல்வாமா போல மீண்டும் ராணுவ வீரர்களை சாகடிக்க முடியாது. ஆகவே பிரச்சினையை திசை திருப்ப வேண்டும். அதனால்தான் குடியுரிமைச்சட்டத்தை கையில் எடுத்து விட்டது.
தேர்தல் பத்திரம், தேர்தல் ஆணையர் விவகாரங்களை திசை திருப்புவது மட்டும் நோக்கமல்ல.
குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக நிச்சயம் போராட்டம் நடக்கும். எங்காவது வன்முறை நிகழ்ந்தால், (அப்படி நிகழாவிட்டால், அரசே ஏற்பாடு செய்யும்) அதைக் கொண்டு கலவரங்களை நாடு முழுதும் தூண்டுவது, சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி வாக்கு வாங்கி நாட்டின் அமைதிக்கு வாய்க்கரிசி போடுவதுதான் நோக்கம்.
அது நிகழக்கூடாதென்றால் போராட்டங்கள் அழுத்தமாக உண்மைகளை அமைதியாக சொல்ல வேண்டும். கலவர சங்கிகளின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் அவர்களின் சதிகளை அம்பலப்படுத்த வேண்டும்.
ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளே வீழ்ச்சியடைந்தார்கள், மோடி மட்டும் என்ன பெரிய??????/
No comments:
Post a Comment