Sunday, March 17, 2024

1989 ராஜீவ் போல மோடி . . .

 


ஜி.கே.மூப்பனார் ஒரு ஞானசூனியம் என்று வாழப்பாடி ராமமூர்த்தி சொன்னது நினைவில் உள்ளதா?

ஆனந்த விகடனில் மதன் போட்ட ஒரு கார்ட்டூனில் தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனை அவனது அப்பா "யார் வந்திருக்காங்க பாரு!" என்று உறவினர் ஒருவர் வருகையை முன்னிட்டு எழுப்ப முயல்வார்.  அந்த சிறுவனோ "போப்பா! ராஜீவ் காந்திதானே!" என்று சொல்லி தூக்கத்தை தொடர்வான். இது நினைவில் உள்ளதா? 

மேலே உள்ள இரண்டு சம்பவங்களும் 1989 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ராஜீவ் காந்தி பல முறை நடத்திய தமிழ்நாட்டு பயணங்களை ஒட்டி நிகழ்ந்தது.

கூட்டணி வைக்காமல் தோற்றுப் போனதற்காக வாழப்பாடி மூப்பனாரை ஞானசூனியம் என்று தாக்கி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியையும் பரிசாக பெற்றார்.

நினைத்த போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்த ராஜீவ்காந்திக்கு மக்கள் தோல்வியைத்தான் பரிசாகக் கொடுத்தார்கள்.

அதை விட மோசமான படுதோல்வியை தமிழ்நாட்டு மக்கள் மோடிக்கு கொடுப்பார்கள். அவர் ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வர, வர தோல்வியின் அளவுதான் அதிகரிக்கும். அதை புரிந்து கொள்ள முடியாத ஞானசூனியம்தான் ஆட்டுக்காரன் என்பதும் முக்கியமானது.


No comments:

Post a Comment