நேற்று முன் தினம் சில நிமிடங்கள் முக நூல் முடங்கியது அனைவருக்கும் தெரியும். அதற்கு முன்பாக எனக்கு டிவிட்டரில் பிரச்சினை.
சில மாதங்களாகவே ட்விட்டர் பக்கத்தை திறந்தால் அது சங்கிகளின் பதிவுகளையே, பெரிய சங்கி மோடி தொடங்கி சில்லறை சங்கி எஸ்.ஜி.சூர்யா வரை காண்பிக்கும்.
நானும் என் பதிவுகளை அங்கே பின்னூட்டமாக போட்டு விடுவேன்.
நேற்று முன் தினமும் அது போல ஆர்.என்.ரெவி எனும் கொள்ளையன் என்ற பதிவை பின்னூட்டமிட்டுக் கொண்டிருந்த போது எனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.
ஏராளமான விரும்பாத நடவடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருப்பதால் பக்கம் பூட்டப்படுகிறது. அதனை மீண்டும் பயன்படுத்த வேண்டுமெனில் இந்த சோதனைகளில் தேர்ச்சி பெறுங்கள் என்று செய்தி வந்தது.
அதெல்லாம் எல்.கே.ஜி குழந்தைகளுக்கான சோதனைகள்தான்.
பிறகு ஒரு வழியாக ட்விட்டர் மனம் வைத்தது.
இனிமே விதிகளை படிக்கவும் என்று ஆலோசனை வேறு.
சங்கிகள் சரியான கோழைகள். விமர்சனத்திற்கு பதில் சொல்ல அருகதை இல்லாமல் கணக்கையே முடக்கப்பார்க்கிறார்கள்.
இதற்கெல்லாமா நான் அஞ்சுவேன்! எத்தனை வேடதாரிகளை இது வரை சந்தித்து அம்பலப்படுத்தியுள்ளேன். இவர்கள் எல்லாம் ஜூஜூபி.
No comments:
Post a Comment