யாரோ
அவங்க வீட்டிலேயே பின்னாடிலியிருந்து கீழே தள்ளி விட்டாங்களாம். கீழே விழுந்து நெத்தியில
அடி, மூக்கில அடி, ரத்தமா ஒழுகுது. ஆஸ்பத்திரியில சேர்த்து மூனு தையல் போட்டாங்க, ஆஸ்பத்திரியிலேயே
தங்கி ரெஸ்ட் எடுக்க சொன்னா, மக்களுக்கு செய்ய வேண்டிய வேலை இருக்குன்னு கிளம்பியாச்சு.
இதெல்லாம்
செஞ்சது மோடின்னுதானே நெனச்சீங்க?
இவங்களும்
மோடி மாதிரியேதான். டுபாக்கூர், முரடு.
மம்தா
பானர்ஜியின் லேட்டஸ்ட் ஸ்டன்ட் இது.
யம்மா
மம்தா உங்க குடும்பத்து ஆளுங்க ரொம்பவுமே மோசம். கீழே தள்ளி விடறாங்க, கொட்டற ரத்த்ததை
(அது மெல்லிசா வழியற மாதிரிதான் ஏற்பாடு) துடைக்கக் கூட மாட்டேங்கறாங்க. அவங்களை முதலில்
வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க, நாளைக்கு கொலை கூட செய்ய தயங்க மாட்டாங்க, படுபாவிங்க.
ஏம்பா
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டருங்களா, உங்க தீதிக்கு நிஜமாவே அடிபட்டதுன்னு நம்பியா
ஆஸ்பத்திரிக்கு கூட்டம் கூட்டமா வந்தீங்க?
தொண்டர்
மைண்ட் வாய்ஸ் : அப்படி நம்பி வரலைன்னா எங்க உடம்பிலிருந்து ரத்தம் கொட்ட வச்சி எங்களை
ஆஸ்பத்திரியில படுக்க வச்சுடுவாங்களே
No comments:
Post a Comment