வாரணாசி கியான்வாபி மசூதியின் குளத்தில் சிவலிங்கம் இருப்பதாக லோக்கல் கோர்ட் நியமித்த அதிகாரி சொல்ல, அந்த இடம் இப்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதியில் ராமர் சிலையை திருட்டுத்தனமாக நடு ராத்திரியில் வைத்தது போல இங்கேயும் திருட்டுத்தனமாக கொண்டு வந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஏனென்றால் சங்கிகள் மிகப் பெரிய கிரிமினல்கள்.
ஆனால் அவர்கள் லிங்கம் என்று எதை சொல்கிறார்கள் என்பதை எழுத்தாளர் தோழர் சம்சுதீன் ஹீரா பகிர்ந்து கொண்டிருந்த பதிவு தெளிவாக்கி விட்டது.
ஆனாலும் கண்டுபிடிக்கப்பட்டது லிங்கம்தான் என்று அயோக்கிய சங்கிகள் பரப்புவார்கள். அடிமுட்டாள் சங்கிகள் அதை நம்பி இன்னும் நாசமாக போவார்கள், நாட்டையும் நாசமாக்குவார்கள்.
கியான்வாபி மசூதியின் பின்பக்க சுற்றுச்சுவரின் வெளியே ஒரு பெண் தெய்வத்தின் உருவம் இருப்பதாகவும் அங்கு தினமும் பூசை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் டெல்லியை சேர்ந்த நான்கு பெண்கள் வழக்கு தொடுத்தார்கள்.
நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக, பள்ளிவாசலின் உள்ளேயும் ஆய்வு செய்து வீடியோ எடுக்க முயன்றார்கள். இதை முஸ்லீம் தரப்பு கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தது. பதற்றம் ஏற்பட்டதால் அன்று பள்ளிவாசலுக்குள் நுழைவது நிறுத்தப்பட்டது.
மறுநாள் முஸ்லீம் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. நிவாரணம் கிடைக்கவில்லை.
அடுத்து ஏராளமான போலீசாரை குவித்து, பள்ளிவாசலுக்குள் நுழைந்து வீடியோ எடுத்தார்கள்.
பள்ளிவாசல் குளத்துக்குள் சிவலிங்கம் இருப்பதாக விஎச்பி தரப்பு அறிக்கை கொடுத்து மீடியாவுக்கும் பேட்டி கொடுத்தது. உடனடியாக பள்ளிவாசல் வளாகத்தில் யாரும் நுழையாதபடி சீல் வைக்கவும் மேற்படி சிவலிங்கத்தை பாதுகாக்கும்படியும் சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குளத்தில் சிவலிங்கம்னு இவனுங்க சொல்றது, தொழுகைக்கு செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய நீர் தொட்டிக்கு நடுவில் அலங்காரத்துக்கு இருக்கும் நீரூற்று போன்ற கல்லை தான்.
இந்த அலங்கார கல் இவனுகளுக்கு சிவலிங்கமாக தெரிகிறதாம். கீழே உள்ள போட்டோவில் இருக்கும் இப்படிப்பட்ட அலங்கார நீரூற்று கற்கள் முகலாயர் காலத்து மசூதிகளில் மட்டுமல்ல உள்ளூர் மசூதிகளிலும் இருக்கும்.
இப்ப கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக பரப்பி சீலும் வைத்து விட்டார்கள். இனி "சட்டப்படி" பெரும்பான்மையினரின் மத நம்பிக்கையின் அடிப்படையில் பள்ளிவாசலை அவர்களிடம் ஒப்படைக்கப்படும்..
மரகத்தில் கல் வைத்து நீரூற்று வைத்து கொள்ளும் அளவிற்க்கு வசதியான பார்ட்டி போல இருக்கு,
ReplyDeleteநல்ல கண் டாக்டரா பாத்து சோதனை செய்து கொள்ளவும். புத்திக் குறைபாடுடன் பார்வைக்குறைபாடும் இருக்கு. வேலூர் சி.எம்.சி கண் மருத்துவமனை வரீங்களா? விபரம் சொன்னா என் செலவுல நல்ல டாக்டரிடம் முன்பதிவு செய்து தரேன்
Deleteசர்வே வீடியோ இன்னும் பார்க்கவில்லையா? தெளிவா HD பிரிண்டில் சர்வே செய்ய ஊழியர்கள் சொல்கிறார்கள். நாட்டு நடப்பை தெரிந்து கொண்டு கருத்து சொல்லவும்.
Deleteமத வெறி பிடித்த காமாலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் லிங்கமாம்.
Deleteநாகரீகமாக பதிவு போடவும் பல இடங்களில் சங்கி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.அங்கு கோவில் இருந்ததா இல்லையா என கோர்ட் முடிவெடுக்கும்
ReplyDeleteஓ! சங்கி என்பது அநாகரீகமான வார்த்தையா? அவர்கள் அநாகரீகமானவர்கள், அயோக்கியர்கள், அடி முட்டாள்கள், மனித குல விரோதிகள், மத வெறியர்கள், பொய்யர்கள், தரகர்கள். இவை அனைத்தையும் நாகரீகமாக ஒரே வார்த்தையில் அடக்கி விடுகிறோம். இனிமேல் வேண்டுமானால் எல்லாவற்றையும் சேர்த்தே எழுதி விடலாம். அங்கே உள்ளது லிங்கம் என்று சொல்வதே ஒரு கட்டுக்கதைதான்.
Delete