#GoBackModi
என்ற ஹேஷ்டேக்கிற்குப் பின்னால் தேச விரோதிகள் இருப்பதாக தேர்தலில் தோற்றுப் போனாலும்
அமைச்சரான, வீட்டின் பின்புறம் தட்டு முட்டு சாமான்கள் உள்ள இடத்தில் அமரவைக்கப்பட்டாலும்
பெருமையோடு விஜயேந்திர சரஸ்வதி முன்பாக கை கட்டி அமர்ந்த எல்.முருகன் சொல்கிறார்.
அவர் கூற்றின்படி முக நூலிலும் ட்விட்டரிலும் நான்கு பதிவுகளை (நேரமில்லாத காரணத்தால் அதற்கு மேல் முடியவில்லை) #GoBackModi என்ற ஹேஷ்டேகோடு பதிவு செய்த நானும் தேச விரோதிதான்.
ஆம். நான் தேச விரோதிதான்.
மக்களை மதத்தின் பெயரால் பிளவு படுத்துவதுதான் இந்த தேசமென்றால்,
மதத்தின் பெயரால், மாட்டுக்கறியின் பெயரால் கொலைகள் செய்வதுதான் இந்த தேசமென்றால்
பிற மதங்களின் வழிபாட்டுத் தளங்களை கிரிமினல்தனமாக கைப்பற்றுவதுதான் இந்த தேசமென்றால்,
இந்திய மக்களின் உழைப்பால் உருவான பொதுத்துறை நிறுவனங்களை பெரும் செல்வந்தர்களுக்கு விற்பதுதான் இந்த தேசமென்றால்,
இந்தியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் எல்.ஐ.சியின் பங்குகளை விற்பதுதான் இந்திய தேசமென்றால்,
பன்முகத்தன்மையை சிதைத்து ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரத்தை திணிப்பதுதான் இந்த தேசமென்றால்
அரசியல் சாசனத்தை, அதன் விழுமியங்களை அழிப்பதுதான் இந்த தேசமென்றால்,
நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீரழிப்பதுதான் இந்த தேசமென்றால்,
நீதிமன்றம், சி.பி.ஐ, தேர்தல் ஆணையம் போன்ற சுயேட்சையான அமைப்புக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதுதான் இந்த தேசமென்றால்
மக்களைப்
பற்றி கொஞ்சமும் கவலைப்படாத, அவர்களிடமிருந்து பறித்து அம்பானி, அதானிகளின் செல்வத்தைப்
பெருக்குவதுதான் இந்த தேசமென்றால்,
அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் காலடியில் வீழ்ந்து கிடப்பதுதான் இந்த தேசமென்றால்
பொய்களை மட்டுமே பேசுபவர்களை ஆட்சியாளராகக் கொண்டது இந்த தேசமென்றால்,
இது என் தேசமல்ல,
காந்தி
கனவு கண்ட தேசமல்ல,
உழைப்பாளி
மக்களின் தேசமல்ல,
மக்கள்
ஒற்றுமையை விரும்புபவர்களின் தேசமல்ல,
இது மோடியின் தேசம், ஆர்.எஸ்.எஸ் ஸின் தேசம். தரகர்களின் தேசம், போலிச்சாமியார்களின் தேசம்.
இப்படிப்பட்ட மோடியின் தேசத்திற்கு நாங்கள் விரோதிகள்தான்.
உண்மையான
தேச பக்தர்கள்.
எங்களைப்
பழிக்கும் நீங்கள்தான் நிஜமான தேச விரோதிகள் மிஸ்டர் முருகன்.
பின் குறிப்பு: முருகன் சொன்னது போன வருடம்தான். ஆனால் சங்கிகள் இன்றைக்கு அதனை மீண்டும் சுற்றில் விட்டதால்தான் இந்த பதிவு.
#GoBackModi.
Super
ReplyDeleteஉண்மையை உரக்க ஊரறிய ெல்ோம். நன்றி ேர்
ReplyDeleteதெரியாம ஒத்த ஓட்டு, மன்னிக்கவும், ஒத்த வார்த்தை சொல்லிட்டாரு இதுக்குப்போய் இவ்வளவு விளக்கமா?
ReplyDeleteஅந்த ஒத்த மனுசனுக்காக எழுதலை. ஒத்த ஓட்டு வாங்கற அளவுக்குத்தான் பவுசு இருந்தாலும் சீன் போடறாங்க இல்லை, அந்த சங்கிகளுக்காக எழுதினேன்
Deleteதேச துரோகி மவனுகளே கதறியே சாவுங்க
ReplyDeleteஆமாம். தாமோதர்தாஸ் மவனும் அவனைச் சேர்ந்த ஆட்டுக்காரனும்தான் கதறிக்கிட்டு இருக்காங்க
Delete