கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் முன்பு சாலையில் நடந்த ஒரு பிரச்சினையில் நவ்ஜோத்சிங் சித்து ஒருவரை அடிக்க அவர் அங்கேயே இறந்து போகிறார்.
இந்த வழக்கில் பஞ்சாப் நீதிமன்றம் அவர் குற்றவாளி என்று முடிவு செய்து ஒரு வருடம் சிறைத் தண்டனை அளிக்கிறது.
அதனை உச்ச நீதிமன்றம் முதலில் மாற்றி ஆயிரம் ரூபாய் அபராதத்தோடு விடுவிக்கிறது.
இறந்து போனவரின் குடும்பத்தினர் மேல் முறையீடு செய்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில்தான் சித்து பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவுகிறார். அங்கே என்னென்ன குழப்பங்கள் செய்ய முடியுமோ, அனைத்தையும் செய்து அமரிந்தர்சிங்கை முதலைமைச்சர் பதவியில் இருந்து நீக்க வைத்து அவரை கட்சியிலிருந்தும் வெளியேற வைத்து விட்டார். பெரும்பாலான காங்கிரஸ் கட்சிக் காரர்களை வெறுப்பேற்றி கடைசியில் சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்கவும் வைத்து விட்டார்.
பாவம்! ஒரு ஸ்லீப்பர் செல்லாக இத்தனை சிரமங்களை மேற்கொண்டும் அந்த ராஜ தந்திரங்களுக்கு பலன் இல்லாமல் போய் விட்டது.
உச்ச நீதிமன்றம் அவருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை அளித்து விட்டது.
No comments:
Post a Comment