Monday, May 2, 2022

இப்போதே தட்டி வைக்காவிட்டால்

 


அந்த மகரிஷி சரக் சப்த் என்பது வெறுமனே சம்ஸ்கிருதத் திணிப்பு மட்டுமல்ல, மனு தர்மத்தின் அடிப்படையிலானது. அதை திணிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பது இயல்பானதே. ஆனால் தமிழ்நாட்டில் அதை அமலாக்க வேண்டுமென்று நினைப்பது ஆபத்தானது.

காத்திருப்போர் பட்டியல் என்பதற்குப் பதில் இடை நீக்கம் செய்வது இன்னும் பொருத்தம்.

இது போல நச்சு பரப்பும் ஆசாமிகளை தலையில் தட்டி வைக்காவிட்டால் விஷக்கிருமிகள் வேகமாக பரவும்.

பிகு: அதென்ன மகரிஷி சரக் சப்த்? நாளை பார்ப்போம். . . .

2 comments:

  1. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ஆங்கிலத்தில் தான் உறுதிமொழி எடுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. எடுக்கப்பட்ட உறுதிமொழியும் பரிந்துரைக்கப்பட்ட ஒன்று என்றும் தெரிய வருகிறது.
    தமிழக அரசின் ஓவர் ரியாக்சன் வெறும் அரசியலுக்காகவே!
    இதில் நடவடிக்கை எடுக்கிறேன் பேர்வழி என்று தமிழக அரசு என்ன செய்தாலும் அவை நீதிமன்றத்தில் நிற்கப் போவதில்லை, ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தில் உறுதிமொழியை எடுத்துக் கொண்டிருந்தால் கூட!
    ஹிந்தி வெறியர்கள் ஹிந்தி தான் தேசிய மொழி என்று பேச, பிராந்திய மொழி வெறியர்கள் அதனை எதிர்த்துப் பேச தேவையில்லாத அரசியல் தான் அவ்வப்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. முக்கிய பிரச்சினைகளை பின்னுக்குத்தள்ளி, திமுக போன்ற பிராந்திய அரசியல் கட்சிகள், குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக, இதனை ஒரு உணர்வுபூர்வமான ஆயுதமாக பயன்படுத்துகின்றன. தங்கள் பிராந்திய அரசின் தோல்விகளை மூடிமறைக்க இவ்விஷயங்களைப் பயன்படுத்துகின்றன.

    ReplyDelete