ஜிக்னேஷ் மேவானி, குஜராத் மாநில சட்டப்பேரவை உறுப்பினரும் தலித் செயற்பாட்டாளாரும் ஆவார். மோடியை விமர்சித்து ட்வீட் போட்டதற்காக அஸ்ஸாம் போலீஸ் கைது செய்தது. பிணை கிடைத்தது, வேனில் செல்கையில் பெண் போலீஸை பாலியல் வன் கொடுமை செய்தார் என்று மீண்டும் கைது செய்து உயர்நீதி மன்றத்தில் அசிங்கப்பட்டு நின்றது அஸ்ஸாமின் பாஜக போலீஸ்.
அவர் வீடு திரும்பிய உடன் ஐந்து வருடத்துக்கு முந்தைய வழக்கில் அனுமதி இல்லாமல் பேரணி சென்றார் என்று மூன்று மாத சிறைத் தண்டனை கொடுத்துள்ளது ஒரு குஜராத் நீதிமன்றம்.
ஐந்து வருடமாக உறங்கிக் கொண்டிருந்த ஒரு வழக்கிற்கு அஸ்ஸாம் பாஜக ஆட்சி அசிங்கப்பட்ட பின்பு தீர்ப்பு வருகிறது.
உபியில் பாஜகவிலிருந்து ஒரு அமைச்சர் கட்சி மாறிய பின்பு எட்டு வருஷத்துக்கு முந்தைய வழக்கில் அவர் கைது செய்யப்படுகிறார்,
A 2 அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக நியமிக்குமாறு கடிதம் கொடுத்த மூன்றாவது நாளில் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தது.
ஏன் எல்.ஐ.சி யில் கூட பல வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த ஒரு தற்காலிக ஊழியர்கள் வழக்கிற்குக் கூட நிர்வாகத்திற்கு சாதகமான தீர்ப்பு, பங்கு விற்பனை தொடங்குவதற்கு ஒரு வார காலம் முன்பு வருகிறது.
இந்த டைமிங் எல்லாம் நெருடலா இருக்கே ஜட்ஜய்யா.
No comments:
Post a Comment