மோடியின் அமைச்சரவையில் இடம் பெற பொய்யனாய் இருக்க வேண்டியதுதான் முதல் தகுதி போல.
*நாளொரு கேள்வி: 24.05.2022*
தொடர் எண்: *723*
இன்று நம்மோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் *சு.வெங்கடேசன்*
#######################
*முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா?*
கேள்வி: ரயில்வே துறையில் தனியார் மயம் இருக்காது என அத்துறை அமைச்சர் கூறி இருக்கிறாரே?
*சு. வெங்கடேசன்*
சென்னை வருகை தந்த
அமைச்சர் ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என்று அறிவித்திருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுஆகும்.
*தேசிய ரயில் திட்டம்* என்ற ஒன்றை இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது. வெளியிட்டிருக்கிறது. இதனை நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். அந்தத் திட்டத்தில் கூறப்பட்டு இருப்பது என்ன?
* 2031 க்குள் அனைத்து சரக்கு ரயில்களும் தனியார்மயம் ஆகிவிடும்.
* இந்திய ரயில்வே வேகன் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது.
* அதேபோல லாபம் வரக்கூடிய குளிர்சாதன இருக்கை மற்றும் 3 அடுக்குபடுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை மட்டும் கொண்ட விரைவு வண்டிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.
இப்படி அந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளதா இல்லையா?
*லாபம் வரும் வண்டிகள் அனைத்தும் தனியாருக்கு. இழப்பு ஏற்படும் வண்டிகள் மட்டும் அரசுக்கு* என்ற கொள்கையை அறிவித்துவிட்டு ரயில்வேயில் தனியார்மயம் இல்லை என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது இல்லாமல் வேற என்ன?
அனைத்து வண்டிகளும் தனியார்மயமானால்
*பயணக் கட்டணம் உயரும். பயணிகள் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் ரயில்வேயின் நிரந்தர வேலை வாய்ப்புகள் பறிமுதலாகும் .சமூக நீதி பாதிக்கப்படும்.*
பொதுமக்கள் கட்டுப்படியான ரயில் பயண வசதி இன்றி பாதிக்கப்படுவார்கள்.
*செவ்வானம்*
No comments:
Post a Comment