Monday, May 23, 2022

புல்டோசர் போலீஸ்காரர்கள்

 


அஸ்ஸாமில் ஒரு லாக்கப் மரணம். போலீஸ் ஸ்டேஷனை கொல்லப்பட்டவரின் உறவினர்களும் நண்பர்களும் அப்பகுதி மக்களும் முற்றுகை இடுகின்றனர். போலீஸோடு தள்ளுமுள்ளூ ஏற்படுகிறது. அதிலே யாரோ போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைக்கிறார்கள். தீ அணைக்கப்பட்டு விட்டது. சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளன்று வாகனங்களுக்கு எப்படி போலீஸார்களே தீ வைத்தார்களோ அது போல, போலீஸே தீ வைத்திருக்க்லாம் என்பது மக்களின் சந்தேகம்.

மறுநாள் போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்தவர்கள் என்று சிலரது வீடுகளை போலீஸே புல்டோசர் கொண்டு தரை மட்டமாக்கி விட்டது.

அதெப்படி பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் வீடுகளை இடிக்கும் அதிகாரம் போலீசாருக்கு இருக்கிறது?

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று போலீஸ் சந்தேகப்படுபவர்களின் வீடுகளை எந்த விசாரணையும் இல்லாமல் இடித்துத் தள்ளலாம் என்று ஏதாவது புதிய சட்டம் வந்துள்ளதா என்ன?

இந்த அராஜகத்தை எல்லாம் நீதிமன்றம் கண்டு கொள்ளாதா?

பேயரசு ஆட்சியில் பிணங்களை தின்பதைத் தவிர வேறென்ன நடக்கும்!

 

4 comments:

  1. தமிழ்நாட்டில் முதல்வரின் உறவினர்களின் ஜீ ஸ்கோயர் நிறுவன ஊழல்களை அத்து மீறல்களை எழுதியதற்க்காக பலர் மீது கிரிமினல் வழக்கு பதியபடுகிறது. தோழர் எப்போது அதை பற்றி பேசுவார்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஆலோசனை சொல்லியுள்ள அனாமதேய அன்பர், நான் எழுப்பியுள்ள பல பிரச்சினைகள் குறித்து அவரது வலைப்பக்கத்திலோ அல்லது முக நூல் பக்கத்திலோ ஏதாவது எழுதியிருந்தால் அதற்கான இணைப்பை அளிக்குமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன். அதை படித்த பின்பு நான் பதில் அளிக்கிறேன்.

      Delete
    2. ஆலோசனை இல்லை. சந்தேகம் தான் கேட்டேன். உலக தலைவர்கள் எல்லாரையும் தன் பதிவுகளால் வறுத்து எடுக்கும் தோழர் உள்ளூர் மேட்டர்க்கு ஜகா வாங்குகினாரு. அதான் ..இதுல நீ பேசு நான் பதில் சொல்கிறேன்னு உதார் வேற. நான் என்ன வேலை வெட்டி இல்லாம தினமும் எவனையாச்சும் திட்டிகிட்டு இருக்கேனா?

      Delete
    3. நான் என்ன எழுதனும்னு நீ சொல்லாதே! வேலை வெட்டி இருக்கறவன் எதுக்கு இங்க வந்து கமெண்ட் போடறே! நீ யாரு, உன் யோக்கியதை என்ன, உன் கேடு கெட்ட கூட்டாளிங்க யாரு என்பதெல்லாம் உன் மூஞ்சியை காண்பித்தால் தெரியும் என்பதால் ஒளிஞ்சுக்கிட்டு வரவன் நீ. உனக்கெல்லாம் பேசவே அருகதை கிடையாது

      Delete