தேசத்துரோகச் சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்திடம் சொன்னது மோடி அரசு.
"காலனியாதிக்கத்தின் சுமைகளை தொடரக் கூடாது" என்று மோடி விரும்புவதால் தேசத்துரோகச்சட்டத்தை மறு ஆய்வு செய்யப் போவதாக நேற்று முன் தினம் உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது.
ஆஹா, மோடி அரசு என்ன திருந்தி விட்டதா என்றெல்லாம் ஆச்சர்யப்படாதீர்கள்.
மோடியை கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்று அவதூறு சுமத்தி பல முக்கியமான செயற்பாட்டாளர்களை தேச துரோகச் சட்டத்தில் சிறையில் அடைத்து வாட்டி வதைப்பது நினைவில் உள்ளதா?
பிரதம மந்திரியை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் மூன்று வருடங்களாக குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யாததிலிருந்தே அது ஒரு பொய் வழக்கு, அவர்களை சிறையிலடைத்து சித்திரவதை செய்ய வேண்டுமென்ற பில்லாரங்கா கிரிமினல் கூட்டாளிகள் குரூர சிந்தனை புரியும்.
சித்திரவதைக்கு உள்ளானவர்கள் மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக சட்டம் பொருந்துமா என்று உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை முடக்கவே மோடியின் பல்டி.
அந்த சட்டத்தை மறு ஆய்வு செய்ய இருப்பதால் அது வரை வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தை வேண்டுகிறார். எப்போது உங்கள் ஆய்வு முடியும் என்று தலைமை நீதிபதி கேட்டால் அதெப்படி சொல்ல முடியும் என்று கை விரிக்கிறார்.
அப்படியென்றால் அதற்கான கால வரையறையை நாங்கள் நிர்ணயிக்கட்டுமா என்ற தலைமை நீதிபதியின் கேள்விக்கும் பதில் இல்லை.
ஆக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சாகும் வரை எந்த விசாரணையும் இல்லாமல் வதை பட வேண்டும் என்பதே மோடி அரசு பல்டி அடித்ததன் அயோக்கியத்தனமான நோக்கம்.
No comments:
Post a Comment