Monday, May 16, 2022

உமக்கேன் பயம் திருட்டுமூர்த்தி???

 


அரசு வங்கி ஊழியர்கள், அதிகாரிகளை கழிசடை என்று திட்டிய திருட்டுக் கணக்கு விஷமூர்த்தி, அரசு வங்கிகளில் அரசின் பங்கை 50 % ஆகக் குறைக்கச் சொல்லி நிர்மலா அம்மையாருக்கு ஆலோசனை தருகிறார். அப்போதுதான் சி.பி.ஐ, சி.வி.சி தொந்தரவெல்லாம் இருக்காது என்று காரணமும் சொல்கிறார்.

மோடியின் ஆட்சியில் சி.பி.ஐ யும் சி.வி.சி யும் பல் இல்லாத பாம்புகள், பற்களும் நகங்களும் இல்லாத புலிகள். அதைப் பார்த்தே விஷமூர்த்திக்கு ஏனோ பயம்!

ஊழல், முறைகேடுகளை விசாரிப்பதற்குத்தான் இந்த இரண்டு அமைப்புக்களுமே. (அந்த வேலையை செய்யாமல் ஆட்சியாளர்களின் ஏவல் நாய்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது இன்னொரு விஷயம்) ஊழல் பேர்வழிகளுக்குத்தான் அவர்கள் தொந்தரவு.

பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 50 % ஆகுமானால் அதன் பொதுத்துறை தன்மை பறி போகும் என்பது நமது கவலையென்றால், அப்படிப்பட்ட நிலைமை வந்தால் சி.பி.ஐ, சி.வி.சி தலையீடு இல்லாமல் ஊழல், முறைகேடு, மோசடி எல்லாம் செய்யலாம் என்பது விஷமூர்த்தியின் கணக்கு!

நரியின் பார்வை இரையின் மீதுதான் என்பது போல திருட்டுக் கணக்கு விஷமூர்த்திக்கு மாட்டிக் கொள்ளாமல் திருடுவது பர்றித்தான் சிந்தனை.

3 comments:

  1. இதுதான் திருடன் கையில் சாவியோ? கொடுத்தாலும் கொடுப்பார்கள்!

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete