Tuesday, May 24, 2022

கேட்டுச் சொல் அண்ணாமலை

எங்கள் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். உங்கள் நிதியமைச்சரிடம் பேசி அதற்கான விளக்கங்களை அளிக்கவும் மிஸ்டர் ஆட்டுக்காரர். (அதற்கு விளக்கம் சொல்ல உமக்கு அறிவு கிடையாது என்பதால்தான் கேட்டுச் சொல்ல சொல்லியுள்ளேன்)



 *நாளொரு கேள்வி: 23.05.2022*


வரிசை எண்: *722*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
######################

*முழுச் சுமையும் மத்திய அரசுக்கா?*

கேள்வி: பெட்ரோல் டீசல் மீதான வரிக் குறைப்பில் ஏற்படும் நிதிச் சுமையை முழுக்க மத்திய அரசுதான் சுமக்கப் போகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறாரே! 

*க.சுவாமிநாதன்*

"இங்கு எல்லா மொழி ஆவணங்களும் கூடுதல் கட்டணம் எதுவுமே இன்றி  ஜெராக்ஸ் எடுக்கப்படும்" 

என்று ஒளி நகல் கடையில் போர்டு மாட்டினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நிதியமைச்சரும் வரிக் குறைப்பு போர்டை மாட்டுகிறார். 

மூன்று விசயங்கள் பார்க்கலாம். 

*ஒன்று* மொத்த வரிகள் ஒரு லிட்டருக்கு மத்திய அரசால் இப்போது போடப்படுவது ரூ 20.60. அதில் அடிப்படை எக்சைஸ் வரி வெறும் ரூ 1.40 மட்டுமே. இதில் இருந்து மட்டுமே மாநில அரசுகளுக்கு 41 சதவீதம் கிடைக்கும். அதாவது ஒரு லிட்டருக்கு 0.58 பைசா கிடைக்கும்.  மொத்தம் வரியான ரூ 20.60 இல் 58 பைசாவை மட்டுமே மாநில அரசுகளுக்கு பகிர்வதாக வரி முறைமையை ஏன் வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் நாங்கள் வரிக் குறைப்பால் எழும் எல்லா இழப்பையும் சுமக்கிறோம் என்பது எவ்வளவு ஏமாற்று! இதேதான் டீசலிலும்... மொத்த வரிகள் ரூ 17.03... அதில் அடிப்படை எக்ஸைஸ் வரிகள் ரூ 1.80 தான். ஒரு லிட்டர் டீசல் விற்றால் அதில் கிடைக்கிற வரிகள் 17.03 இல் மாநில அரசுகளுக்கு கிடைப்பது 73 பைசாதான்.  மாநில அரசுகளுக்கு பங்கு போய்விடக் கூடாது என்பதற்கே ஸ்பெசல் எக்சைஸ் வரிகள், விவசாய கட்டுமான வளர்ச்சி செஸ், சாலை வளர்ச்சி செஸ் இப்படி வரிகளைப் போட்டு இருக்கிறார்கள். மாநிலங்களுக்கு தரவும் மாட்டார்கள். ஆனால் நீங்களும் குறையுங்க என்று ஆலோசனை தருவார்கள். மாநிலங்களை வஞ்சித்து விட்டு அதை மறைத்து எப்படி கேள்வி எழுப்பிகிறார்கள் பாருங்கள்! 

*இரண்டாவது*, தமிழ்நாடு நிதியமைச்சர் கேட்டிருக்கிற கேள்வி. மத்திய அரசின் வரிகளை கூட்டிக் கொண்டே போகும் போது மாநில அரசுகளிடம் ஆலோசனையே கேட்காதவர்கள், இப்போது குறையுங்க என்று அறிவுரை சொல்வது தார்மீகமா? என்பதே. தார்மீகம் என்றால் என்ன விலை, அதன் மீது ஜி.எஸ்.டி எவ்வளவு போடலாம் என்று யோசிப்பவர்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்? 

*மூன்றாவது,* பெட்ரோல், டீசல் விலையுயர்வு என்பது மக்கள் வாழ்வுரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள போர். போர் நிறுத்தம் செய்யலாம் என்று மத்திய அரசு நினைத்தால் வரி விகிதங்கள் 2014 க்காவது திரும்ப போக வேண்டுமல்லவா! இன்று இந்து ஆங்கில நாளிதழ் முதல் பக்கத்தில் ஒரு கிராஃப் (Graph) இடம் பெற்றுள்ளது. 2014 இல் பெட்ரோல்  விலையில் லிட்டருக்கு ரூ 9.48 ஆக இருந்த மத்திய அரசின் வரிகள் இன்று லிட்டருக்கு ரூ 19.90 ஆக வரிகள் உள்ளது. டீசலில் அன்று லிட்டருக்கு ரூ  3.57 ஆக இருந்த மத்திய வரிகள்  இன்று  ரூ 12.23. ஆனால் மாநில அரசு வரிகள் இப்படி உயரவில்லை. டெல்லி உதாரணத்தை எடுத்தால் 2014 இல் விலையில் 16.7 சதவீதமாக இருந்த மாநில அரசு வரிகள் இன்று 16.2 சதவீதமாக அப்படியே அல்லது சற்றுக் குறைந்து உள்ளது. ஆகவே மத்திய அரசுதான் இன்னும் பின் வாங்க வேண்டும். வரிகளை குறைக்க வேண்டும். 

மக்களிடம் முழு உண்மைகளை பேசி விவாதங்களை மத்திய அரசு நடத்த வேண்டும். இருந்தாலும் கேரள அரசு வரிகளை குறைத்து இருப்பது வரவேற்கத் தக்கது.

*செவ்வானம்*

4 comments:

  1. ரொம்ப குசும்பு உங்களுக்கு,
    அவ்வளவு புத்தகம் படிச்சவருக்கு இதுகூடவா தெரியாது ( இன்னைக்கு தேதிக்கு படித்த புத்தகத்தின் எண்ணிக்கை கூடியிருக்கலாம் ) I P S வேற படிச்சிருக்காரு! அவருக்கு இன்னொரு முகம் இருக்கு மறந்திடாதீங்க!

    ReplyDelete
  2. வரி குறைப்பு செய்த்தது cess வரியில். இதில் மாநில அரசுக்கு எந்தவித பங்கும் கிடையாது. excise taxக்கும் cessக்கு, வேறுபாடு தெரியாத ஒருவர் union தலைவராம். இவரு licயை காப்பாத்த போறாராம்.

    ReplyDelete
  3. இதில் எகஸைஸ் வரியில் 40% மாநிலத்திற்க்கு கிடைக்கிறது. இதுல இவங்க வாட் வரி கூடுதலாக போடுவாங்களாம். போனவாரம் கேரளா அரசு வாட் வரி குறைசாங்களே அது எப்படி சார்? தமிழ்நாட்டில் 2014ல் வாட் வரி என்ன இன்றைய நிலை என்ன?

    ReplyDelete
  4. யோவ் அனாமதேயம், ஒழுங்கா படி. சும்மா உன் அரிப்பை தீர்க்க ஏதாவது எழுதாதே. ஏண்டா உன்னால முகத்தை காண்பிக்க முடியுமாடா? மொட்டைப் பெட்டிஷன் எழுதற நாய்க்கும் உனக்கும் என்னடா வித்தியாசம் இருக்கு!

    ReplyDelete