Thursday, May 19, 2022

காங்கிரஸ் வாய் மூடுவது நல்லது.

  


காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் தன் தளத்தை பாஜகவுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டது.

 தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா தவிர வேறு எந்த மாநிலத்திலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மக்கள் பிரதிநிதிகள் கிடையாது.

 உட்கட்சி மோதலால் ராஜஸ்தான், சத்திஸ்கர் அரசுகள் எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்து போகலாம்.

 நிலைமையை சீரமைக்க என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.  உதய்பூரில் நடைபெற்ற “மண்டையை பிய்த்துக்கொள்ளும் அமர்வில்” இருந்த முடியும் போனதுதான் மிச்சம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

 அப்படி இருக்கையில் ஏதோ கொஞ்ச நஞ்சம் மரியாதை இருக்கிற தமிழ்நாட்டிலேயும் அதனை கெடுத்துக் கொள்ள கடும் முயற்சி செய்கிறார்கள்.

 பேரறிவாளன் சொல்லாததை நான்தான் இணைத்தேன் என்று எப்போது புலனாய்வு அதிகாரி தியாகராஜன் சொன்னாரோ, அப்போதே அவர் விடுதலைக்கு தகுதியானவராகி விட்டார்.

 அவர் விடுதலையைக் கண்டித்து “வாயில் துணியை கட்டி ஆர்ப்பாட்டம்” என்றெல்லாம் அவர்கள் இன்று நடத்தியது அவர்களை மேலும் மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி விடும். (காங்கிரஸ் இழப்பு பாஜகவுக்கு சாதகம் என்ற கொடுமைக்காகத்தான் நாம் கவலைப்பட வேண்டியுள்ளது)

 அதனால் காங்கிரஸ் வாயில் துணி கட்டி போராடுவது போன்ற விபரீத முடிவுகளுக்குப் பதிலாக வாயை மூடி இருப்பது உத்தமம்.

3 comments:

  1. தியாகராஜன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தாரா? அல்லது நீதிமன்றத்தில் நான் செய்தது தவறு என சொல்லி ரிட் மனு கொடுத்தாரா? இல்லை நான் செய்த்தது தவறு என சட்டமன்றத்தில் சொன்னாரா? ஏதோ போகிற போக்கில் சொல்லி விட்டு சென்றது எப்படி நம்ப முடியும்? காலம் சென்ற ரகோத்தமன் தான் வாக்குமூலம் பதிவு செய்தேன் என சொல்லி இருக்கிறார்.. நீதிமன்றத்தில் பதிவு செய்யபடாத , நீருபிக்கபடாத ஒன்றை எப்படி நம்புவது? உங்களுக்கு தெரியாதது இல்லை .

    ReplyDelete
  2. புலிகளின் பினாமி கூட்டம் இவரை நிரபராதி போலவும் பாதிக்கபட்டவர்கள் போலவும் காட்ட முயல்கிறது. தண்டனை காலம் முடிந்து இனியாவது அவர் தன் வாழ்க்கையை திருந்தி நிம்மதியாக கழிப்பார் என நம்புவோம். அவர் நிரபராதி என சொல்லினால் , கூடவே அவர் தனது கருணை மனுவில் என்ன எழுதி இருந்தார், சாட்சியத்தில் என்ன சொன்னார் போன்ற கருத்துகளையும் சீர் தூக்கி பார்க்க வேண்டும். கருணை கடித்ததில் நான் செய்தது தவறு என்றும், அனைத்து குற்றங்களையும் ஒத்து கொண்டு மன்னிப்பு கேட்டு இருந்தார். அந்த கடிதம் live lawவில் காண கிடைக்கிறது.

    ReplyDelete
  3. விதண்டாவாதத்திற்கு பதில் இல்லை. ராஜீவ் கொலையின் மூலவர்கள் சுதந்திரமாக திரிகிறார்கள் என்பதுதான் உண்மை

    ReplyDelete