Tuesday, May 24, 2022

அந்த சிவலிங்கங்கள் இன்னும் அப்படியேதான்????

 2012 ம் வருடம் தானே புயலில் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட போது எங்கள் சங்கத்தின் சார்பில் பல நிவாரணப்பணிகளை மேற்கொண்டோம்.

 பல பள்ளி மாணவர்கள் தங்கள் நோட்டுப்புத்தகங்களை இழந்ததால் அதனை அளித்தால் நன்றாக இருக்கும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தோழர்கள் ஆலோசனை சொல்ல, பல கிராமத்து பள்ளிகளுக்கு சென்று நோட்டுப்புத்தகங்களை வழங்கினோம்.

 அப்படி நாங்கள் சென்ற ஊர் குமராட்சி ஒன்றியத்தில் இருந்த தவர்த்தான்பட்டி என்றொரு கிராமம்.

 அந்த ஆரம்பப்பள்ளி வாயிலில் நாங்கள் பார்த்த இரண்டு சிவலிங்கங்களின் புகைப்படங்கள் கீழே உள்ளது.

 




மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த சிலபெருமான் இங்கே பள்ளிக் குழந்தைகளின் புத்தகப் பைகளை சுமந்து கொண்டு இருந்தார்.

 அந்த சிவலிங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றனவா என்று தெரியாது.

 ஒரு வேளை அப்படி இருந்தால் . . .

 மசூதிகளில் உள்ள நீரூற்றுகளை சிவலிங்கமாக பார்க்கும் சங்கிகள், இங்கே அனாமத்தாக கிடக்கும் சிவ லிங்கங்களை அப்புறப்படுத்தி உரிய இடத்தில் வைத்து வழிபடலாமே!

 ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள்.

 ஏனென்றால் அதிலே அவர்களுக்கு அரசியல் ஆதாயம் கிடையாது.

 

No comments:

Post a Comment