Monday, May 9, 2022

ஃபிங்கர் பௌல் சாமியார்

 


இம்மாதத்தின் துவக்கத்தில் மதிய உணவு சாப்பிட நானும் என் மனைவியும் வேலூரில் உள்ள "டார்லிங் ரெசிடென்ஸி" ஓட்டலுக்கு போயிருந்தோம்.

அங்கே ஒரு ஆஜானுபாகுவான மடாதிபதி, உடல் முழுதும் ருத்ராக்ச மாலைகள், தலைக்கு மேலும் கட்டிய ருத்ராக்ச மாலையோடு பட்டர்ஸ்காட்ச் ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வீல் சேரில்தான் அவர் அமர்ந்திருந்தார். கலைஞர் பயம்படுத்தியது போல அட்வான்ஸ்ட் சேர். அவர் சாப்பிட்ட உணவுத் தட்டை அப்போதுதான் எடுத்துப் போனார்கள். ஐஸ்க்ரீமிற்குப் பிறகு வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு சர்வரை அழைத்தார்.

"ஃபிங்கர் பௌல்" கொண்டு வா என்று சொல்ல அவர் ஒரு நொடி தாமதிக்க, மீண்டும் சத்தமாக "பிங்கர் பௌல் கொண்டு வா" என்று அதட்ட, அது வந்ததும் அதிலேயே கைகழுவிக் கொண்டு கிளம்பி விட்டார்.

மடாதிபதிகள் என்றால் இப்படித்தான் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து பல்லக்கில்தான் பவனி போவேன் என்று கலவரத்தை தூண்டுவதெல்லாம் டூ மச்.

4 comments:

  1. இதெல்லாம் உங்களுக்கே அநியாமாக தெரியல? இன்னமும் LICயில் ஆன்லைன் மூலமாக ஒரு பாலிசி வாங்க முடியாது. எந்தவிட பிரச்சனையும் இல்லாமல் ஆன் லைனில் சந்தா கட்டி விட்டால் நமக்கு நாமே பாராட்டு பத்திரம் கொடுத்துவிட்டு அடுத்த வேலையை மன நிம்மதியோடு பார்க்கலாம்.
    BHIM,GPAY காலத்தில் இன்னமும் ஆன் லைனில் சந்தா கட்டினால் கமிசன் என்ற பாகவதர் காலத்து முறை.
    ஏஜெண்ட் என்ற காலாவதியான முறை. இன்றைய ஆன் லைன் காலத்தில் ஏஜெண்ட் வைத்து ஓட்டுவது கேடான முறை. சொந்தகாரன் ஏஜெண்ட் என்றால் மற்றவன் பாடு திண்டாட்டம். இப்படி ஒரு நிறுவனத்தை சீர் படுத்தினால் இந்த தொழிற் சங்க ஆட்களால் தொந்தரவு.
    திருச்சியில் வாங்கிய பாலிசியின் முகவரியை சென்னையில் மாற்ற முடியாதாம். முசுடு ஆட்களால் நிறைந்த நிறுவனம். இதைகூட செய்ய சோம்பேறி தனம். வேலலையை ஓழுங்கா பாருங்க, அப்புறம் ரோட்டுக்கு வந்து கூவுங்க. எவனாச்சும் உங்களுக்கு ஆதரவு தருகிறார்களா?? திருந்த பாருங்க.

    ReplyDelete
  2. வாகன இன்ஸீரன்ஸ் ஒரு நிறுவனத்தின் இருந்து மற்றொருபொது துறை
    நிறுவனத்திற்கு மாற்றுவதும்
    முடியாதாகவேயுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தவறான தகவல். மாற்ற முடியும். மாற்றியுள்ளேன்.

      Delete