Sunday, May 8, 2022

வியர்வை, கண்ணீர், வலி, தியாகத்தால்

 


*நாளொரு கேள்வி: 03.05.2022*

 

தொடர் எண்: *702*

 

இன்று நம்மோடு லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் முதுநிலை பேராசிரியர் *சி. சரத் சந்திரன்* (இந்து நாளிதழ் கட்டுரையின் தமிழ்ச் சுருக்கம் - .சுவாமிநாதன்)

######################

 

*வியர்வை, கண்ணீர், வலி, தியாகத்தால் கட்டப்பட்ட எல்..சி

 

கேள்வி: இந்திய பொருளாதாரம், சமூக தளங்களில் எல்..சி யின் முக்கியத்துவம் என்ன

 

*சி. சரத் சந்திரன்*

 

இந்திய நாட்டின் ஆயுள் இன்சூரன்ஸ் தொழிலில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிறுவனமாகும் எல்..சி

 

நேருவின் தொலை நோக்கு பார்வையை நாம் போற்ற வேண்டும். விடுதலைக்கு பிந்தைய ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட நிறைய நிறுவனங்கள் *காலத்தின் சோதனையில் வெற்றி பெற்று உலகத் தரத்திற்கு உயர்ந்து நிற்கின்றன.* எண்ணெய் முதல் உருக்கு வரை, அணைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை, ஆகப் பெரும் . டி களில் துவங்கி பெருமைமிகு தேசிய வடிவ கழகம் வரை அக்காலத்தின் உருவாக்கங்கள் பொருளாதாரத்தின் எல்லா தளங்களிலும் பரவி விரவி உள்ளன

 

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு இம் மாபெரும் நிறுவனங்களை *நவீன இந்தியாவின் திருக்கோயில்கள்* என்று அழைத்தார்இந்தியா இன்று பொருளாதார சக்தியாக வளர்ந்து நிற்கிறது எனில் சந்தேகமில்லாமல் அதைத் தாங்கி நிற்கிற அஸ்திவாரம் ஆக திகழ்வது இக் குறிப்பிடத்தக்க நிறுவனங்கள்தான்

 

1947 இல் 34 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் தனி நபர் சராசரி வருமானம் அப்போது ரூ 249 தான். எழுத்தறிவு விகிதம் 12 சதவீதம் மட்டுமே. உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றாகவே இந்தியா இருந்தது. *அத்தகைய ஏழ்மையும் குறைவான வருமானமும் கொண்ட சூழலில்தான் சமூகப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து காப்பீடு கலாச்சாரத்தை நேரு வளர்த்தெடுத்தார்.* அப்படி பிறந்த கனவே அரசால் நடத்தப்படும் நிறுவனமாக எல். சி  செப் 1, 1956 இல் உருவாக வழி செய்தது

 

60 ஆண்டுகளாக எல்..சி *தொடர்ச்சியான நிலைத்த வளர்ச்சியை* எட்டி வந்துள்ளது. 29 கோடி பாலிசிகள், 38 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் என்ற அளவிற்கு வளர்ந்து உலகின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இருந்தாலும் எல்..சி 2017 இல் வைர விழாவை - 60வது ஆண்டு - கொண்டாடிய போது இதன் பெரும் சாதனைகள் உரிய அளவில் பகிரப்படவில்லை. ஒரு முக்கியமான உண்மை, *1956 இல் துவங்கி பெண் வேலை வாய்ப்பில் எல்.. சி நிகழ்த்தி வந்துள்ள சாதனை* பொது வெளியில் போதிய அளவு பேசப்படவில்லை.

 

எல்..சி யில் 1950, 60 களிலேயே *பெண்கள் முகவர்களாக* வந்தனர். வேலை வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்த காலம் அது. இப் பணிக்கு வயது வரம்பு இல்லை. இவ்வளவு நேரம் வேலை பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கல்வித் தகுதியோ வெறும் உயர்நிலைப் பள்ளி தேர்ச்சியே. ஆகவே இல்லத் தொழிலாளர்களாக உள்ள பெண்கள் எல்..சி பாலிசிகளை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானத்தை குடும்பத்திற்கு ஈட்ட முடிந்தது

 

அந்த காலம் நவீன தொழில் நுட்ப தொடர்புகளும், கை பேசிகளும் வராத காலம். சில வீடுகளில் மட்டுமே தொலைபேசிகள் இருக்கும். ஆகவே பெண்கள் நேரடி தொடர்புகளின் வாயிலாகவே விற்பனை செய்ய வேண்டி இருந்தது. உண்மையில் அவர்களில் பலருக்கு வணிக அனுபவம் கிடையாது. இருந்தாலும் எல்..சி யால் ஊக்கமுள்ள முகவர் படையை உருவாக்க முடிந்தது. அவர்களிடம் *நிறைய வெற்றிக் கதைகளும்* இருந்தது

 

எல்..சி யின் முதல் பெண் மேலாண்மை இயக்குனர் *உஷா சங்வான்* இத்தகைய முன்னெடுப்பு பற்றி 

 

 " _இது காலம் பதிவு செய்துள்ள மிகப் பெரும் சமூகப் பரிசோதனை. பயிற்சியற்ற  ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து பக்குவமிக்க நிபுணர்களாக வளர்த்தது"_ 

 

என்று விவரிக்கிறார். எல்..சி *புதுமையான ஊக்குவிப்பு முறைமையை* கொண்டுள்ளது. மேலாளர் கிளப் என்பதில் துவங்கி வணிக சாதனை அடிப்படையில் சேர்மன் கிளப் வரை உயர முடியும். பல முகவர்கள் இந்த ஏணியில் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறி உச்சத்தை விரைவில் எட்டி நல்ல வருமானத்தையும் ஈட்டுகிறார்கள்.

 

இந்திய இன்சூரன்ஸ் துறை வரலாற்றில் நடந்தேறிய முக்கிய நிகழ்வு 2000 ஆம் ஆண்டில் போட்டிக்கு கதவு திறக்கப்பட்டதுதான். *போட்டி கடுமையாக இருக்கும், எல்..சி ஓரம் கட்டப்படும் என்ற பெரும் கவலையையும் இது  அப்போது ஏற்படுத்தியது.* இன்று ஆயுள் இன்சூரன்ஸ் துறையில் 24 தனியார் நிறுவனங்கள் வணிகக் களத்தில் உள்ளன. அவற்றில் பல பன்னாட்டு இணை வினையிலும் உள்ளன. இருந்தாலும் எல்..சி 75 சதவீத சந்தைப் பங்கை கைப்பற்றி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அதன் உரிமப் பட்டுவாடா விகிதமும் 99.87 சதவீதம் ஆக உள்ளது

 

சங்வான் வார்த்தைகளில் 

 

 _"பெருமளவு வெற்றி ஒப்பிட இயலாத 12 லட்சம் அர்ப்பணிப்பு மிக்க முகவர் படையாலாயே கிடைத்துள்ளது. அவர்களில் பலர் பெண்கள். பெண்களின் ஆளுமையை வெளிப்படுத்தவும், திறமைக்கு உகந்ததாகவும் இந்த வேலை வாய்ப்பு இருந்தது. அவர்களின் வெற்றி கற்பனையையும் விஞ்சுகிற அளவிற்கு இன்சூரன்சை பரவலாக்கியது."_ 

 

எல்..சியின் வணிக வியூகத்தின் தனித்த முக்கிய அம்சமாக இருப்பது அதன் புதுமையான அணுகுமுறையே. பெருமளவு வறுமையும், வருமான வீழ்ச்சியும் உள்ள தேசத்தில், காப்பீடு என்பதை அகால  மரணத்திற்கான இழப்பீடு ஆக மட்டும் கருதி விற்க முடியாது என்பதை எல்..சி மிகச் சரியாக உள் வாங்கி இருந்தது. ஆகவே அது பாலிசி திட்டங்களை சேமிப்பை முன்னிறுத்தி உருவாக்கியது. குழந்தைகளின் கல்வி, மகளின் திருமணம் என இந்தியக் குடும்ப விழுமியங்களை மனதிற் கொண்டு திட்டங்களை கொண்டு வந்தது. செலுத்தப்பட்ட பிரீமியங்களின் பயனை முழு முதிர்வு காலத்திற்கு முன்பே முறையான சில கால இடைவெளிகளில் தந்து அவசரப் பணத் தேவைகளை நிறைவு செய்ய உதவியது. அதே நேரத்தில் இறப்பு இடரையும் காப்பீடு செய்தது. *புதிய தலைமுறை போட்டியாளர்களின் வணிக பாங்கு, பண்பாடு ஆகியவற்றில் இருந்தும் எல்..சி வேறுபடுத்திக் காட்டியது.* தனியார் நிறுவனங்கள் தொழில் நுட்பம் சார்ந்த வணிகத்தில் கவனம் செலுத்திய போது, எல்..சி அணுகுமுறை மக்களை மையமாக கொண்டிருந்தது

 

*இரண்டு கரங்களை குவித்து தீபத்தின் ஒளியை பாதுகாப்பதான* எல்..சியின் இலட்சினை இந்தியக் கிராம மக்களை நோக்கியதாக இருந்தது. சாதாரண மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தையும் உருவாக்கியது

 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 30 கோடி மக்களின் வாழ்வுக்கான காப்பீடு என பெரிய அளவு விளம்பரத்தோடு *பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா* திட்டத்தை 2014 ஆகஸ்ட் 15 அன்று அறிவித்த போதே எல்..சி 20 கோடி கிராம மக்களுக்கான காப்பீடை வழங்கி இருந்தது. இந்திய பொதுத் துறை நிறுவனங்களிலேயே தனக்கென்று ஒரு தனித்த இடத்தையும் எல்..சி உருவாக்கிக் கொண்டது

 

திரைத் துறை பேராளுமை *சத்யஜித்ராய்* வாழ்க்கை கதையை எழுதிய ஆண்ட்ரூ ராபின்சன் சொன்னது இது

 

 _"இந்தியர்கள் நம்ப முடியாத ஒரு திறனை தங்களிடம் வைத்திருக்கிறார்கள். சொந்த மண்ணின் வெற்றிக் கதைகளை அந்நியர்கள் கண்டு பிடித்து சொல்கிற வரை அவற்றை அலட்சியப்படுத் துவார்கள் என்பதே அது!"_ 

 

எல்..சி யும் தனது பன்முக சாதனைகளை அடக்கியே வாசித்து வந்துள்ளது. இந்தியப் பிரதமர் *"திறன் இந்தியா குறிக்கோள்"* (Skill India Mission) என்கிற முன் முயற்சியை அறிவித்த போது பல அந்நிய முகமைகள்நிறுவனங்கள் தேன் கோட்டில் கை வைக்க ஓடோடி வந்தன. ஆனாலும் எல்..சி யோடு ஒப்பிடும் போது வேறு எந்த நிறுவனமும் பெருஞ்செயல் ஆற்றியதாக இல்லை

 

எல்..சி யின் பல லட்ச முகவர்கள் இந்தியாவின் மனதைத் தொடுகிற உண்மையான கதைகளை வைத்திருக்கிறார்கள். "பலமான திறன் குறிக்கோளை" எட்டுகிற அமைப்பை உருவாக்குகிற உண்மைக் கதைகளை கொண்ட புதையலாக எல்.. சியே இருக்கிறது. ஒருமுறை "மேலாண்மையியல் குரு" *சி.கே. பிரகலாத்* ஒரு முறை சொன்னார். இந்தியாவின் மேலாண்மைப் பள்ளிகளில் இது போன்ற கதைகள் பகிரப்பட வேண்டும். அன்னியக் கதைகளுக்கு மாற்றாக இவை இருக்க வேண்டுமென்று... இந்தியாவின் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு எல்..சி யின் இணைய வழி பயிற்சியும், உண்மைக் கதைகளும் பாடத் திட்டத்தில் இடம் பெற வேண்டும். *இந்தியாவில் கல்வி என்பது வேலை தேடுவதற்கான வழியாக கருதப்படுகிறதே தவிர அறிவைத் தேடும் முறைமையாக இல்லை.* 

 

இப்போது எல்..சி ஒரு மாற்றத்தை நோக்கி அழைக்கப்படுகிறது. இந்திய மேட்டிமை கார்ப்பரேட் சமுகத்தின் பகுதியாக உயர்த்தப்படுவதற்கு பங்குச் சந்தையில் பட்டியல் இடப்படுகிறது.

 

*இருந்தாலும் தேசம் ஒன்றை மறக்கவே கூடாது. இது சாமானிய இந்திய மக்களின் வியர்வை, கண்ணீர், வலி, தியாகத்தால் கட்டப்பட்டுள்ள நிறுவனம்.* இத்தகைய ஜனநாயக குணங்களே எல்..சி யை விலை மதிப்பற்ற சொத்தாக இன்னும் நிலை பெறச் செய்திருக்கிறது

 

*செவ்வானம்*

 

 

2 comments:

  1. செல்வன்May 8, 2022 at 7:19 PM

    இதெல்லாம் உங்களுக்கே அநியாமாக தெரியல? இன்னமும் LICயில் ஆன்லைன் மூலமாக ஒரு பாலிசி வாங்க முடியாது. எந்தவிட பிரச்சனையும் இல்லாமல் ஆன் லைனில் சந்தா கட்டி விட்டால் நமக்கு நாமே பாராட்டு பத்திரம் கொடுத்துவிட்டு அடுத்த வேலையை மன நிம்மதியோடு பார்க்கலாம்.
    BHIM,GPAY காலத்தில் இன்னமும் ஆன் லைனில் சந்தா கட்டினால் கமிசன் என்ற பாகவதர் காலத்து முறை.
    ஏஜெண்ட் என்ற காலாவதியான முறை. இன்றைய ஆன் லைன் காலத்தில் ஏஜெண்ட் வைத்து ஓட்டுவது கேடான முறை. சொந்தகாரன் ஏஜெண்ட் என்றால் மற்றவன் பாடு திண்டாட்டம். இப்படி ஒரு நிறுவனத்தை சீர் படுத்தினால் இந்த தொழிற் சங்க ஆட்களால் தொந்தரவு.
    திருச்சியில் வாங்கிய பாலிசியின் முகவரியை சென்னையில் மாற்ற முடியாதாம். முசுடு ஆட்களால் நிறைந்த நிறுவனம். இதைகூட செய்ய சோம்பேறி தனம். வேலலையை ஓழுங்கா பாருங்க, அப்புறம் ரோட்டுக்கு வந்து கூவுங்க. எவனாச்சும் உங்களுக்கு ஆதரவு தருகிறார்களா?? திருந்த பாருங்க.

    ReplyDelete