தலைமை ஆசிரியர் தோழர் இரா.எட்வின் அவர்களின் முகநூல் பதிவையும் அதற்கு நான் அளித்த பின்னூட்டத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
பணியில் சேர்ந்த புதிது
+2 பிள்ளைகளுக்கு ’ஸ்ட்ரெஸ்’ நடத்த வேண்டும். எப்படி நடத்துவது என்று பிடிபடவில்லை
சீனியர் கங்காதரன் சாரிடம் என் பிள்ளைகளுக்கும் சேர்த்து நடத்திவிடுமாறு கேட்கிறேன்
இந்த வருஷம் நான் நடத்தி விடுவேன். நான் ஓய்வு பெற்றதும் யார் நடத்துவாங்க. இப்படி உட்கார் என்று பக்கத்தில் அமரவைத்து அதை எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லித் தருகிறார்
அடுத்த நாள் நான் +2 B பிரிவில் நடத்துகிறேன்
பக்கத்து வகுப்பில் இருந்து எப்படி நடத்துகிறேன் என்று கவனிக்கிறார்
முடிந்து ஸ்டாஃப் ரூம் வந்ததும் கைகளைப் பிடித்துக் கொள்கிறார். செம எட்வின், +2 A கும் நீயே நடத்திடு
அய்யோ சார். எனக்கு ஒன்னும் தெரியாமதான இருந்தேன். நீங்கதானே சொல்லிக் கொடுத்தீங்க
இல்லேனு சொன்னேனா. நேத்து உனக்கு நடத்தத் தெரியல. எப்படி அதைக் கையாள்வதென்று நான்தான் சொல்லிக் கொடுத்தேன்
இல்லன்னு சொல்லல
இன்று நீ என்னைவிட அதை சூப்பரா ஹேண்டில் பண்ற
நடத்தினேன்
எனக்கு முடியாது என்பதை உணர்ந்த தருணத்தில் என்னுடைய சீனியரிடம் பொறுப்பை கொடுக்க நான் எத்தனித்ததும்
அவர் கற்றுத் தந்ததை உள்வாங்கியதும்
அவரைவிட நான் நன்றாக அதை ஹேண்டில் செய்வதாய் அவர் உணார்ந்த தருணத்தில்
அவர் வகுப்பில் என்னை எடுக்க அழைத்ததும்
நம்மால முடியாதப்ப
அல்லது நம்மைவிட சிறப்பாக செய்பவர்கள் நம்மிடம் இருக்கும்போது
மாற்றிக் கொடுப்பது நல்லது
இதை மே 26 உடன் யாரும் பொருத்திக் கொண்டால் நான் பொறுப்பல்ல
என்னுடைய பின்னூட்டம்
அதற்கெல்லாம் வாய்ப்பில்லை ஆசிரியரே! தன்னை விட திறமையானவர்கள் யாருமில்லை என்று ஆணவத்தில் ஆடும் மூடர் கூட்டத்தில் நல்ல ஆலோசனைக்கெல்லாம் வாய்ப்பில்லை தோழரே!
என்ன சரிதானே!
இவ்வளவு அடக்கத்துடன் நீர் இருப்பதைப் பார்த்து அகமகிழ்கிறேன்.ஆனால் சில நேரம்்பிரதமரையே வசை பாடும் போது தான்.....?. அன்புடன் ஸ்ரீநாத்.
ReplyDeleteஅதற்கென்ன சார் செய்வது? ஏழு வருடமாக நாட்டை அழித்துக் கொண்டிருக்கிற, பெரு முதலாளிகளின் தரகரை, குஜராத்தில் படுகொலை செய்து ரத்த ஆற்றை ஓட வைத்த பிரிவினை வாதியை, மத வெறியரை வசை பாடாமல் போற்றி புகழவா முடியும்? மனிதன் என்பதற்கே அருகதை இல்லாத ஒருவரை பிரதமர் என்பதற்காகவெல்லாம் மதிக்க முடியாது.
Delete