Friday, May 21, 2021

நவகேரள கீதாஞ்சலி

 நவகேரள கீதாஞ்சலி

மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் முகநூல் பதிவு கீழே உள்ளது.

பதிவிற்குக் கீழே காணொளியும் உள்ளது. அவசியம் கண்டு மகிழுங்கள்.




தோழர் பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னனியின் வெற்றியைத் தொடர்ந்து நேற்று கேரளத்தில் நடைபெற்ற பதிவியேற்பு விழாவில் புகழ்பெற்ற கலைஞர்கள் 53 பேர் பங்களிப்பு செய்த இசை ஆல்பம் ஒளிபரப்பப் பட்டது.

முப்பது நிமிடங்கள் கொண்ட இந்த இசை ஆல்பம் மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் இ எம் எஸ் அவர்களின் உரையுடன் துவங்குகிறது. 1957ல் பதவியேற்ற முதல் அமைச்சரவையில் தோழர் இ எம் எஸ் பேசிய பேச்சின் குரல் பதிவு, “ நான் பிறந்த போது இருந்த கேரள சமூகமல்ல இப்பொழுது இருப்பது, நிறைய்ய நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, இம்மாற்றத்துக்கு நானும் சிறிய பங்களிப்பு செய்துள்ளேன்”.

நாராயண குருவின் வார்த்தைகள் இடம்பெறும் பாடல் துவங்குகிறது. மகாகவிகள் வள்ளத்தோள், உள்ளூர், வயலார், ராமவர்மா, பாஸ்கரன், இடைச்சேரி, கடம் மணிட்டா, மற்றும் தற்காலத்தின் சிறந்த கவி பிரபா வர்மா ஆகியோரின் புரட்சிகர பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

“நாங்கள் துவக்கிவைத்த, நல்ல வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நிலை எனது வாழ்நாளில் கிட்டாமல் போகலாம், அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். ஏனெனில் எமது தோழர்கள் அந்நிலையை அடைவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தோழர் ஏ.கே. கோபாலன் “எண்ட ஜீவித கதா” என்ற தன்னுடைய
சுயசரிதையின் இறுதி வரிகள் இடம்பெற்றுள்ளன.

”நாங்கள் அழமாட்டோம், நாங்கள் தோற்கமாட்டோம், நாங்கள் வெல்வோம்” என்ற பாடல், 
“நாங்கள் சோதரர்கள்…” என்ற பாடல்,

நிறைவாக “வளர்ந்த நாடுகளில் உள்ள வாழ்க்கை நிலை கேரளாவின் மக்கள் பெறவேண்டும். அதனை வரும் 25 ஆண்டுகளில் அடைவதற்க்கு வலிமையான அடித்தளம் அமைப்போம்” என்று கேரளத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவு இடம்பெறுகிறது.

கேரள கம்யூனிச இயக்கத்தின் இரத்தசாட்சியான வரலாற்றுப் பக்கங்களை கவிதைகளாலும், காட்சிகளாலும், இசையாலும் நினைவுபடுத்துகிறது #நவகேரள_கீதாஞ்சலி

காணொளியை அவசியம் பாருங்கள்



No comments:

Post a Comment