Tuesday, May 4, 2021

விவோ ஐபிஎல் - குற்றம் குற்றமே

 எல்லாம் தேர்தல் முடிவுகளால் வந்தது

 கீழே உள்ள பதிவை எழுதி நான்கு நாட்களாகி விட்டது. தேர்தல் முடிவுகள் காரணமாக பகிர்ந்து கொள்ள கால தாமதமாகி விட்டது. 

ஐ.பி.எல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டாலும் குற்றம் குற்றமே!

 


அமித் ஷா மகன் தேச விரோதிதானே?

 இந்திய கிரிக்கெட் வாரியம் இப்போது ஐ.பி,எல் போட்டிகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் இது தேவையா என்றொரு கேள்வி உள்ளது. ஆனால் இப்பதிவு அது பற்றியல்ல. இந்தியாவில் தேர்தல் நடத்த வேண்டும் அதனால் பாதுகாப்பு தர முடியாது என்று சொன்னதால் ஷார்ஜாவுக்குப் போய் போட்டி நடத்தி கல்லா கட்டிய அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியம். அவர்களுக்கு கொரோனா எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது.

 போன வருடம் சீனாவுடன் எல்லையில் மோதல் வந்த போது சீன நிறுவனத்தின் ஸ்பான்ஸர்ஷிப் அவசியமில்லை என்ற முடிவை கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகே எடுத்து தங்களை தேச பக்தர்களாக காட்டிக் கொண்டது கிரிக்கெட் வாரியம்.

 இதோ இந்த வருட ஐ.பி.எல் தொடங்கி விட்டது. இந்த வருடம் மீண்டும் “விவோ ஐ.பி.எல்” தான். பிரதான ஸ்பான்ஸராக விவோ திரும்பி விட்டது.

 சீனாவுடன் எல்லைப் பிரச்சினை முடிந்து விட்டதா?

சீனா இப்போது எதிரி நாடாக இல்லாமல் நட்பு நாடாகி விட்டதா?

இப்போது சீன நிறுவனத்தின் நிதியை பெற்றுக் கொள்வது தேச விரோதம் கிடையாதா

 அப்படி தேச விரோதம்தான் என்றால் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும் அமித் ஷாவின் மகனுமான ஜெய்ஷாவும் தேச விரோதிதானே!

No comments:

Post a Comment