Thursday, May 27, 2021

மோடி நண்பரால் எம்.பி தற்கொலை . . . .

 


லட்சத்தீவை நாசப்படுத்தி வரும் பிரபுல் கோடா படேல் என்ற சங்கியை மேலும் அம்பலப்படுத்தி குமரி மாவட்ட மூத்த தோழர் ஷாகுல் ஹமீது அவர்கள் எழுதியுள்ள முக நூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 அவரை விதை போட்டால் துவரையா முளைக்கும் என்பது போல சங்கியாக இருந்தால் அவரது குணாம்சம் அயோக்கியத்தனம் என்றுதானே இருக்கும்!

 கீழே உள்ள படத்தில் உள்ளவர்தான் பிரபுல் கோட்டா பட்டேல்.

 


குஜராத் RSS தலைவர், கோடாபாய் ரஞ்சோத்பாய் பட்டேல் (Khodabhai ranchhodbhai Patel) என்பவரின் மகன்.. 

 பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர்; 

 மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அங்கே சக உள்துறை அமைச்சராக இருந்தவர்; தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் தான் இவர்.. 

 நமது நாட்டில் மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் (Union Territory) நிர்வாக பொறுப்பில் Administrator என்ற பதவியில் IAS அதிகாரிகளை நியமிப்பது தான் வழக்கம்..

 ஆனால், இந்திய வரலாற்றில் முதன்முறையாக 2016 ம் ஆண்டு, டாமன், டயூ என்ற பகுதிக்கு நிர்வாக அதிகாரி (Administrator) யாக, தனது நண்பரும், பாஜகவை சேர்ந்தவருமான பிரபுல் கோடா பட்டேலை மத்திய அரசு அல்லது மோடி அரசு நியமித்தது...

 இந்த நியமனத்தின் பின் புலத்தில் தெளிவான ஒரு திட்டம் இருந்தது என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடிந்தது..

 ஆமாம்...

 டாமன், டயூ பகுதியில் நிர்வாக அதிகாரி (Administrator) என்ற பெயரில், ஒரு கூலிப்படை கும்பலின் தலைவனைப் போல் களமிறங்கினார் பட்டேல்..

 குஜராத்தின் பெரும் பணக்காரர்களின் சொர்க்கமாக, கேளிக்கை மையமாக திகழும் இடங்கள் தான் டாமன், டயூ கடற்கரை..

 சுற்றுலா வணிகத்தின் பொன்னான வாய்ப்புகளை நோட்டமிட்ட ஒரு கார்ப்பரேட் முதலாளிக்காக, ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடியிருப்புகளையும், படகுகளையும், வலைகளையும் அழித்து, அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை(MP) தற்கொலை செய்யும் அளவுக்கு தள்ளியவர் தான் இந்த பட்டேல்...

 2019ம் ஆண்டு நவம்பர் மாதம், மோட்டி டாமன் கலங்கரை விளக்கம் முதல், ஜாம்பூர் வரை உள்ள கடற்கரையில், பல தலைமுறைகளாக மீன் பிடித் தொழில் செய்து வந்த உள்ளூர் ஆதிவாசி பழங்குடிமக்களை ஈவு இரக்கமின்றி துரத்தி துரத்தி வெளியேற்றினார் பிரபுல் கோடா பட்டேல் என்ற நமது பிரதமரின் நண்பர்..

 இந்த கடற்கரை பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் தகர்த்து எறியப்பட்டன.. எதிர்ப்பை தடுத்து நிறுத்த 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு தான் இந்த அக்கிரமங்கள் நடந்தேறின.. பள்ளிகள் அனைத்தும் தற்காலிக சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டு உள்ளூர் மக்கள் அனைவரும் அங்கே அடைக்கப்பட்டனர்..

 இந்த கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்(MP) மோகன் தேல்கர்; தாத்ரா நாகர் ஹவேலி தொகுதியில், தொடர்ந்து ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்...

 இந்திய நாட்டின் கடற்கரை முழுவதையும், நிலப்பரப்புகளையும், பவழப் பாறைகளையும், ஏன் பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் இயற்கை முழுவதையும், கார்ப்பரேட் முதலாளிகளின் காலடிகளில் வைக்கும் கூலிப்படை கும்பலின் கங்காணி போல் செயல் படும் பிரபுல் கோடா பட்டேல், மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் தேல்கர் மீது கண் வைத்தார்....

 தொடர்ந்து வந்த மிரட்டல்களை எதிர் கொள்ள முடியாமல்,  நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் தேல்கர் மும்பையில் Hotel Sea Green என்ற ஹோட்டல் ஒன்றில்,2021, பிப்ரவரி மாதம் 22ம் தேதி, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்;, அவர் தற்கொலை செய்து கொண்ட அறையிலிருந்து அவர் எழுதிய 15 பக்க கடிதம் (Suicide Note) ஒன்று கிடைத்தது.. அந்த கடிதத்தில் குறிப்பாக பிரபுல் கோடா பட்டேலின் பெயரை குறிப்பிட்டு, தனது தற்கொலைக்கு இவர் தான் காரணம் என்று எழுதியுள்ளார்..

 தற்கொலை செய்து கொண்ட மோகன் தேல்கர் மகன் அபினவ் தேல்கர் பிரதமர் நரேந்திர மோடிக்கு படேல் மீது புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார்..

 தனது தந்தையை பிரபுல் கோடா பட்டேல் மிரட்டி 25 கோடி ரூபாய் கேட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார் அபினவ் தேல்கர்..

 ஆனால்..

எதுவும் நடக்கவில்லை...

எதுவுமே நடக்காது...

ஏனென்றால் Praful Khoda Patel நமது பிரதமரின் நெருங்கிய நண்பர்...

RSS தலைவர் ஒருவரின் மகன்...

இப்போது பாஜக தலைவர்களில் ஒருவர்..

பொறுக்குமா மத்திய அரசு...

 டாமன், டயூ பகுதிகளின் Administrator பொறுப்பில் இருந்த பட்டேலை, லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியாக(Administrator) கூடுதல் பொறுப்பை (Additional Charge) யும் ஒப்படைத்துள்ளது மத்திய அரசு..

 இப்போது, லட்சத்தீவு மக்களின் வயிற்றில் அடித்து, அந்த அழகிய தீவுகளை, அதன் பேரழகை, பவழப் பாறைகளை, நிலப்பரப்பை, தங்களது கார்ப்பரேட் எஜமானர்களுக்காக கொள்ளையடிக்க, ஒரு இனப்படுகொலைக்கு தயாராக களமிறக்கப்பட்டுள்ளார் பிரபுல் கோடா பட்டேல்..

 எங்கோ ஒரு மூலையில், எங்கோ ஒரு தீவில் என்ன நடந்தால் என்ன என்று அலட்சியமாக இருந்தால், ஒரு நாள், நாம் கூட ,இது போன்ற ஒரு சூழலை எதிர் கொள்ள வேண்டிய நிலை வரும்....

 


மேலே உள்ள படத்தில் உள்ளது தற்கொலை செய்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மோகன் தேல்கர்...

No comments:

Post a Comment