Friday, May 21, 2021

அச்சில் பார்த்த அதே மகிழ்ச்சி

 


36 வருடங்களுக்குப் பிறகு - முதல் கவிதை



கல்கி இதழின் அனைத்து பிரதிகளையும் ஸ்கேன் செய்து அவர்களின் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். 

அதைப் பார்ப்பதற்கான இணைப்பு இங்கே உள்ளது

சில வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு கீழே

மதுரையில் கல்லூரியில் படித்த காலம், சென்னைப்  பல்கலைக் கழகத்தின் எம்.பி.ஏ தேர்விற்குக் கடைசி  நிமிடத்தில் பணம் கட்டி ஹால் டிக்கெட் எப்போது வரும் என்று தவிப்போடு ஒவ்வொரு நாளும் காத்திருந்த      நேரம்  அது.  

அந்தத் தேர்வின் மூலமாகவே சென்னைப்பட்டினத்தை முதல் முறையாக பார்க்கத் துடித்த பட்டிக்காட்டு மனோபாவத்தில் இருந்த அந்த நாளில் கவிதை ஒன்று தோன்றியது.

அதனை கல்கிக்கு அனுப்ப அவர்கள் மாணவர் பக்கத்தில் பிரசுரித்து பத்து ரூபாய்    பணம் வேறு அனுப்பி விட்டார்கள். அதுதான் எனது  முதல் வருமானம்.

 ஆனால் ஒரு

 வில்லங்கமும் கூடவே வந்து சேர்ந்து விட்டது. கவிதைக்குப்   பக்கத்தில் ஒரு பெண்ணின் நெடிய கண்களின் படத்தினை   வேறு போட்டு விட்டார்கள். 




ஆகவே நான் எப்படிப்பட்ட  கடிதத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன் என்ற கேள்வி, வீட்டிலும் சரி, கல்லூரியிலும் சரி வந்து விட்டது.


இன்று கல்கி களஞ்சியத்தில்  அந்த கவிதை வெளியான 23.06.1985 இதழை தேடிக் கண்டு பிடித்து அந்த பக்கத்தை பார்க்கையில் அன்று எழுதிய முதல் கவிதையை அச்சில் பார்த்த அதே மகிழ்ச்சி மீண்டும் கிடைத்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நன்றி கல்கி



1 comment:

  1. எனக்கும் மகிழ்ச்சி
    வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete