தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கிய நேரம் தொட்டு மூத்தத்த்த்த்த பத்திரிக்கையாளரின் முகநூல்
பக்கத்திற்கு அவ்வப்போது சென்று கொண்டிருக்கிறேன்.
நான்கு
நாட்கள் முன்பு இறந்து போன ஒடிஷ எழுத்தாளருக்கான அஞ்சலி செய்திக்குப் பிறகு அங்கே மயான
அமைதியே காணப்படுகிறது.
மூன்று
காரணங்கள் இருக்கலாம் என்பது என் அனுமானம்.
“என்ன
பேச்சு பேசினோம். இப்போ போய் ஏதாவது எழுதினா அசிங்கமாக பதில் சொல்வாங்க. இந்த அவமானம்
தேவையா என்ற அச்ச உணர்வாக இருக்கும்.
அல்லது
மோதிஜி,
எடுபிடி கூட்டணியை ஆதரித்து எழுதுவற்கான ஒப்பந்தம் தேர்தலோடு முடிந்திருக்கலாம். ஒப்பந்தத்தை
ரெனியூவல் செய்வதற்கு முன்பு எழுதினால் பேமெண்ட் வராது என்ற எச்சரிக்கை உணர்வாக இருக்கலாம்.
அல்லது
மீண்டும்
திமுகவே சரணம் என்று காலில் விழுவதற்கு தயார் செய்து கொண்டிருக்கலாம். அதற்கான அவகாசமாகக்
கூட இருக்கலாம்.
கடைசியாகச்
சொன்னதற்கு வாய்ப்பு அதிகம். 1996 சட்டப்பேரவைத் தேர்தல். ஒரு குறிப்பிட்ட கட்சியில்
ஒருவர் சீட் கேட்டார். கிடைக்கவில்லை. இருப்பினும் பிரதான சாலையில் இருந்த அவர் கடையின்
மீது அவரது கட்சி சின்னம் சீரியல் பல்புகளால் ஒளிர்ந்தது. மூன்று நாட்கள்தான். அதன்
பிறகு அந்த சின்னத்தை காணவில்லை. அடுத்த மூன்று நாட்கள் அந்த கட்டிட மாடி வெறிச்சோடிக்
கிடந்தது. நான்காவது நாள் மீண்டும் சீரியல் பல்புகள் பிரகாசித்தது. அது அவர் புதிதாக
தாவியிருந்த கட்சி. அது போல மாலனும் சில நாட்கள் அமைதி காத்தால் அது ஆதாயத்திற்கே என்று
உணர்க.
பிகு : மாலன் இப்படி பம்முவதைப் பார்த்தால் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
No comments:
Post a Comment