Saturday, May 29, 2021

தள்ளிப் போட முடியாது!

 *நாளொரு கேள்வி: 28.05.2021*


தொடர் எண் *362*

இன்று நம்மோடு த.மு.எ.க.ச மதிப்புறு தலைவர் எழுத்தாளர் *ச. தமிழ்ச்செல்வன்*
#######################




*தள்ளிப் போட முடியாது!*

கேள்வி: பேரிடர் காலத்திலும் உழைப்பாளி மக்கள், அவர் தம் உரிமைகள், பண்பாடு எல்லாம் தாக்கப்படுகிறதே! எப்படி எதிர் வினை ஆற்றுவது?

*ச. தமிழ்ச் செல்வன்*

போர்க்களத்தில் நாம் நிற்கிறோம். சக போராளிகள் செத்து விழுவதைப் பார்த்து மனம் கலங்கினால் முன்னேற முடியாது. 

இப்போரில் எதிரி கொரோனா அல்ல. *கொரோனா நம் எதிரியின் கேடயம்.* நாம் ஆக்சிஜன் பற்றிய கவலைகளில் இருக்கையில் அவர்கள் லட்சத்தீவை விழுங்குகிறார்கள்.. என்.ஐ.ஏ அலுவலகத்தை வேளச்சேரியில் திறக்கிறார்கள். மதுரையில் பல கணிணிகளைக் கைப்பற்றுகிறார்கள். சமூக வலைத்தளம் மட்டுமே நமக்கான சிறிய சுதந்திர வெளியைத் தந்தது அதையும் சட்டம் போட்டுக் கையில் எடுக்கிறார்கள். புதிய கல்விக்கொள்கையை கறாராக வேகமாக அமல் படுத்துகிறார்கள். *விவசாயிகளை ஆறு மாதமாகச் சாவுங்கடா..* என்று...பட்டியல் நீள்கிறது. 

அவர்கள்  நிகழ்ச்சிநிரலை தங்குதடையின்றி அடிச்சு நவுத்துகிறார்கள். சில மாநிலத் தேர்தல் வெற்றிகளையுமே  கவனம் திருப்பலுக்கான' ஒன்றாக அவன் மாற்ற்கிறார்கள். சிவில் சமூகத்தைக் கைப்பற்றும் அவர்கள் அஜண்டா தங்கு தடையின்றி முன்னோக்கிச் செல்கிறது. கொரோனோவை போன அலையில் முஸ்லீம் எதிர்ப்புக்கு பயன் படுத்தினார்கள். சட்டங்கள் பலவற்றை நிறைவேற்றப் பயன்படுத்தினார்கள். இப்போது கொரோனா... *கவனம் நமக்கு... கொண்டாட்டம் அவர்களுக்கு....*

லாக் டவுன் முடிந்து, அலை முடிந்து....என்று நம் மனநிலையே  "தள்ளிப்போடும்" மனநிலை ஆகிக் கொண்டிருக்கிறது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு முன்னேறும் போர் வீரரைப்போல, நாம் இன்றைய காலத்துக்கான ஒரு போராட்ட வடிவத்தையும் முழக்கங்களையும் உருவாக்க வேண்டும். *பாசிஸ்ட்டுகளின் நயவஞ்சக வலையாக கொரோனா பயம் மாறிவிடக்கூடாது.* அவர்கள் அஜெண்டாவில் அவர்கள் சற்றும் பின் வாங்காதபோது, நாம் அப்புறம் என்று தள்ளிப்போட முடியாது. கொரோனாவுக்கு எதிரான போரை நடத்திக்கொண்டே இப்போதே இதையும் கையிலெடுக்க வேண்டும்.

******************
*செவ்வானம்*

No comments:

Post a Comment