Sunday, May 30, 2021

கவுண்டமணி, வடிவேலு பாணியில் சமையல்

 


முகநூலில் உலா வந்த நேரத்தில் ஒரு சமையல் சேனல் இடையே வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தது. 

அந்த சேனலில் பொட்டுக்கடலை பர்பி என்று இரண்டு செய்முறை இருந்தது.

சரி நாம் மூன்றாவது முறையை கண்டுபிடிப்போம் என்று முயற்சி செய்தேன்.

பொட்டுக்கடலையை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து, அந்த அளவிற்கு முக்கால் பங்கு சர்க்கரையை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து பாகு பொங்கி வந்த வேலையில் பொட்டுக்கடலை பொடியை போட்டு கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்த போது தட்டில் கொட்டி



துண்டங்கள் போட நினைத்தால் அதுவும் வரவில்லை. அல்வா பதத்திலும் இல்லை.

ஒரு நொடிதான் யோசனை!

"த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா" என்று வடிவேலு பாணியில் பர்பிக்கு பதிலாக உருண்டையாக பிடித்து விட்டேன்.



"கோழி குருடா இருந்தா என்ன, குழம்பு ருசியா இருக்கறதுதான் முக்கியம்" என்று கவுண்ட மணி சொன்னது போல எந்த வடிவில் இருந்தால் என்ன, சுவைதானே முக்கியம்!

பிகு 1: சர்க்கரை இன்னும் கொஞ்சம் அதிகமாக போட்டிருக்க வேண்டும்.

பிகு 2 : சொதப்பவும் சொதப்பிட்டு சமாளிப்பு வேறயா என்று யாரும் கேட்பதற்கு முன்பாக நானே படம் போட்டு விட்டேன்.

No comments:

Post a Comment