தமிழக அரசு சரியான வழியில் செல்கிறது என்பதை சங்கிகளே தங்கள் பதற்றத்தின் மூலமும் வெறிக் கூச்சல்கள் மூலம் நமக்கு உணர்த்தி வருகின்றனர். ஆட்சியை கலைக்க வேண்டும் என்று சுனாசாமி, புரோஹித்திற்கு எழுதிய கடிதம் சங்கிகளின் பதற்றத்திற்கு ஒரு சான்று. கற்பனை உலகில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
சீரியஸான பதிவாக இதை எழுத யோசிக்கவில்லை. ஆனாலும் இவர்களை நினைத்தால் நமக்கு இயல்பாகவே கடுப்பு வருகிறது.
நிற்க
புரோஹித்துக்கு அனுப்பிய கடிதத்தில் சுனாசாமி விலாசமாக "லெமன் ட்ரீ" க்கு எதிராக என்று எழுதியிருந்தார்.
ஏன்யா,
கவர்னர் என்று போட்டால் மட்டுமே போதுமே!
ராஜ்பவன் என்பதுதானே கவர்னர் மாளிகையின் பெயர்!அதைச் சொன்னால் கூட போதுமே, எதற்கு சம்பந்தமே இல்லாமல் எலுமிச்சை மரத்தை சொல்ல வேண்டும் என்று யோசித்தேன்.
ஒரு வேளை கூகிளில் அப்படித்தான் விலாசம் கொடுக்கப்பட்டுள்ளதோ என்று பார்த்தால் அப்படி எல்லாம் இல்லை.
சரி எதற்கும் கூகிள் மேப் ஐ பார்ப்போம் என்று பார்த்தால் அதில் "லெமன் ட்ரீ" க்கு எதிரில்தான் ராஜ் பவன் இருப்பதாக சொல்கிறது.
ஆகவே இது சுனாசாமி தவறில்லை. கூகிள் மேப் லீலை.
No comments:
Post a Comment