நேற்று மறைந்த கி.ரா பற்றி எந்த ஒரு கசப்பான செய்தியும் வரவில்லை. புதுவை அரசு மரியாதையோடு அனுப்பி வைத்தது. அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்போடு கோவில்பட்டியில் சிலை வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஜெமோவோ அவரது குண்டரடிப் பொடிகள் கூட எதுவும் மோசமான முத்துக்களை உதிர்க்கவில்லை.
ஆஹா! தமிழகத்தில் ஏதோ அதிசயம் நடக்கிறதே என்று நினைத்தால் அந்த நினைப்பில் மண்ணை போட்டு மூடி விட்டார் வண்ண நிலவன்
மிகைப் படுத்தப் பட்ட புகழை,ஊதிப்பெருக்க வைக்கப்பட்ட புகழை அடைந்தவர் ராஜநாராயணன்.அவருடைய கரிசல் இலக்கியம் என்பதெல்லாம் இட்டுக் கட்டப் பட்டது.தஞ்சாவூர் இலக்கியம், திருநெல்வேலி இலக்கியம், கொங்கு இலக்கியம் , திருவண்ணாமலை இலக்கியம் என்றெல்லாம் வகைப்படுத்துவதைப் போன்ற அபத்தம் வேறில்லை.இலக்கியம் வட்டாரம் சார்ந்ததல்ல. மொழி,நிலம் சார்ந்த விஷயங்களை வைத்து இலக்கியத்தைப் பிரிப்பது சரியில்லை,நியாயமும் இல்லை.
ராஜநாராயணன் முதல் தரமான,இலக்கியபூர்வமான சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதிய சிறந்த எழுத்தாளர்.(கதைசொல்லி என்பது செல்லம் கொஞ்சுதல். நான் செல்லம் கொஞ்ச விரும்பவில்லை) அவருடைய கரிசல் சொல் அகராதி முக்கியமானது.அவருடைய நாட்டுப்புறக் கதைச் சேகரமும் அவருடைய தனித்த முயற்சிகளே.ஆனால்,அந்தப் பாலியல் கதைச் சேகரிப்பு அவருடைய பெருமைக்கு இழுக்கு சேர்ப்பது.
அவருக்கு ஞானபீடம் கொடுக்கும் அளவுக்கு அவரது கதைகளில் வாழ்வு குறித்த விசாரணைகள் , அல்லது தத்துவார்த்த ஆன்மீக மனநெருக்கடிகள் எதுவும் இல்லை.ஜெயகாந்தன் உரத்த குரலில் கதை சொன்னாலும் அவரது கதைகளில் மேற்குறித்த அம்சங்கள் நிறையவே உண்டு.அதனால்தான் அவருக்கு ஞானபீடம் வழங்கப்பட்டது.ராஜநாராயணனிடம் இது தேடினாலும் அகப்படாது.
அவருக்கு அரசு மரியாதை தரப்படுவது ரொம்ப அதிகப்படியானதே.
துக்ளக் பத்திரிக்கையாளர் என்பதை நிரூபித்து விட்டார். இவர்களால் எப்படி ஒரு மக்கள் படைப்பாளிக்கு அங்கீகாரம் கிடைப்பதை ஏற்க முடியும்!
No comments:
Post a Comment