ஞாபகம் வருதே 16
மோடி பின் துக்ளக்
முகமது பின் துக்ளக்கின் வாரிசாக ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்துள்ளார் மோடி.
என்.டி டிவி தடை விஷயத்தில் பல்டி அடித்தது போல இது விஷயத்திலும் பல்டி அடித்தால் வியப்பில்லை.
கருப்புப் பணத்திற்கு எதிரான போர் என்று சொன்னாலும் அடிப்படையில் இது சாதாரண மக்களுக்கு எதிரான துல்லியமான தாக்குதல்.
ஏற்கனவே குவிந்துள்ள வேலைகளால் சிரமப்படும் வங்கிகளுக்கு தேவையற்ற பணிச்சுமை.
கைவசம் உள்ள பணத்தை மாற்றுகிறவரை அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத அவலம்தான் மக்களுக்கு.
கருப்புப் பணம் உள்ளவர்கள் எல்லாம் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களாகத்தான் வைத்திருப்பார்கள், அவையெல்லாம் இப்போது வெளியே வந்து விடும் என்று நினைத்தால் மோடியைக் காட்டிலும் முட்டாள் யாரும் இருக்க முடியாது.
கண்டெய்னர்களில் பணத்தை பதுக்கத் தெரிந்த அரசியல் கிரிமினல்களால் அதை சிக்கல் இல்லாமல் மாற்றவும் முடியும்.
வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை, நிலமாக, நகையாக, பங்குகளாக பதுக்கி வைத்துள்ளவற்றை எப்படி வெளியே கொண்டு வரப் போகிறார்?
இப்போது இந்த முடிவின் பின்னணியில் வேறு ஏதோ அயோக்கியத்தனத்தை சத்தமில்லாமல் செய்யப் போகிறதா என்ற சந்தேகம்தான் வருகிறது.
பின் குறிப்பு : தன் கைவசமுள்ள நோட்டுக்களை மாற்ற ஆசான் ஏதாவது வங்கிக்குப் போனால் அவர் வேலையை முதலில் முடித்து அனுப்பி விடுங்கள். இல்லையென்றால் அவர் மீண்டும் "அறம்" கற்றுக் கொடுக்கத் தொடங்கி விடுவார்.
ஞாபகம் வருதே 17
முட்டி மோதி சாகும் போதாவது ?????????????
மோடி எனும் நயவஞ்சகனைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ளாமல் பலர் இருக்கிறார்கள் என்பதை முக நூலில் சிலர் போடும் பதிவுகளைப் பார்க்கையில் தெரிகிறது.
ஏற்கனவே பல முறை சொன்னதை மீண்டும் சொல்கிறேன்.
மோடியை ஆதரிப்பவர்கள் மூடர்களாகவோ அல்லது அயோக்கியர்களாகவோ மட்டுமே இருக்க முடியும்.
இந்த துக்ளக் தர்பார் நடவடிக்கையைக் கூட பெருமையாய் கருதுகிற அரைவேக்காடுகள் தங்கள் கைவசம் உள்ள நோட்டுக்களை மாற்ற நிச்சயம் வங்கிகளில் கால் கடுக்க நிற்பார்கள்.
மிகப் பெரும் நெரிசலை வங்கிகள் சந்திக்கவுள்ளன. சமூக அமைதியும் ஒழுங்கும் கண்டிப்பாக சீர்குலையப் போகிறது.
நெரிசலில் முட்டி மோதி அவஸ்தைப் படும் போதாவது தாங்கள் மோடியை ஆதரித்தது எவ்வளவு பெரிய மூடத்தனம் என்பதை உணர்ந்தால் சரி.
ஞாபகம் வருதே 18
ஒரு கொசுவை அடித்த போது
மோடியின் முட்டாள்தனமான முடிவை விமர்சித்தால் மோடி ஆதரவு எடுபிடிகளுக்கு பற்றிக் கொண்டு வருகிறது. இதை கண்டிக்கிற நம்மை படிக்காத தற்குறிகள் என்று சொல்லக் கூட அவர்கள் தயங்குவதில்லை.
அப்படி சொன்ன ஒரு தம்பிக்கு நான் கொடுத்த பதில் கீழே
இவங்களுக்கெல்லாம் எப்போதுதான் புத்தி வருமோ?
No comments:
Post a Comment