இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தியைப் படித்த போது தோன்றியதுதான் மேலே உள்ள தலைப்பு,
முட்டாள்தனமான உளறல்கள். அராஜக நடவடிக்கைகள், குதிரை பேர மோசடிகள் ஆகியவற்றோடு மனைவியை கொடுமைப் படுத்துவதிலும் மோடியின் பாரம்பரியத்தை பின்பற்றும் பிப்ளப் குமாரே மோடியின் வாரிசாக இருக்க தகுதியானவர்.
திரிபுரா பாஜக முதல்வர் அடித்து துன்புறுத்துகிறார்... விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு
அகர்தலா:
திரிபுரா மாநில பாஜக முதல்வர் பிப்லவ் குமார் தேப். உளறல்களுக்குப் பெயர் போனவர். முதல்வராகி பேசிய கன்னிப்பேச்சிலேயே, “மகாபாரத காலத்தில் சேட்டிலைட், இண்டர்நெட் வசதிகள் இருந்தது” என்று கூறி அதிர்ச்சி அளித்தவர்.
“ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தது சரி, ஆனால், டயானா ஹெய்டனுக்கு எதற்காக உலக அழகிப்பட்டம் கொடுத்தார்கள்?” என்று ஆதங்கப்பட்டதாகட்டும், “சிவில் இஞ்சினியரிங் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும்” என்று கூறியதாகட்டும்; “வேலையில்லாத இளைஞர்கள் பீடா கடை வைக்க வேண்டும்” என்று இலவச ஆலோசனை வழங்கியதாகட்டும்- குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமானவர் பிப்லவ் குமார் தேப்.“குளத்தில் வாத்துகள் நீந்துவதால் தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும், தண்ணீர் சுத்தமாகும்” என்று பிப்லவ் தேப் கூறியது பற்றி இப்போது வரை விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுஒருபுறமிருக்க, பிப்லவ் தேப் குமாரிடமிருந்து விவகாரத்து வழங்குமாறு, அவரின் மனைவி நிதி, தில்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிப்லவ் தேப் குமார் தன்னை மிகக்கொடூரமாக அடித்துத் துன்புறுத்துவதாகவும் அந்த மனுவில் நிதி குற்றம் சாட்டியுள்ளார்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteI was wondering if you ever considered changing the structure of
ReplyDeleteyour website? Its very well written; I love what youve got to
say. But maybe you could a little more in the way of content so people could connect with it better.
Youve got an awful lot of text for only having one or 2 images.
Maybe you could space it out better?
This comment has been removed by a blog administrator.
ReplyDelete