Wednesday, April 24, 2019

இதுதான்யா மதுரை

எங்கள் மதுரைக் கோட்டத் தோழரும்  எழுத்தாளருமான தோழர் சுப்பாராவ் அவர்களின்   முக நூல் பதிவு .





7.30 க்கு காயத்ரி திடீரென்று அழகர் பாக்க போலாமா? என்றாள். சரி என்று அவளது அலுவலகமான தல்லாகுளம் தலைமை தபால் அலுவலகம் சென்று அழகருக்காகக் காத்திருந்தோம். அங்கு வாசலில் அலுவலகம் சார்பாக தண்ணீர்ப் பந்தல். தண்ணீர்ப் பந்தலில் என் காயத்ரியின் சினேகிதரான முத்தலீப் தான் மும்முரமாக நீர் மோர் ஊற்றிக் கொண்டிருந்தார். மிக ஆச்சாரமான முஸ்லிம். தலையில் குல்லாய் இல்லாமல் அவரை பார்க்க வே முடியாது. உண்மையில் அவரது பெயரே யாருக்கும் தெரியாது. குல்லா பாய் என்றால் தான் தெரியும்.


எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் பொதுவாக மதிய , இரவு உணவுகளுக்கு இடையே எதுவும் சாப்பிட மாட்டேன். இன்று குல்லா பாய் கையால் இரண்டு டம்ளர் மோர் வாங்கிக் குடித்தேன்.

மனது குளிர்ந்தது.

இது தான் என் மதுரை.


மதத்தை வைத்து மக்களைப் பிரிக்க நினைப் போருக்கு இங்கே சிறிதும் இடம் கிடையாது.

11 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. முத் தலீப்

    இப்படி பிரித்து எழுதுவது அரபில் தவறான பொருள் தரும்

    சேர்த்து எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. சரி செய்து விட்டேன்

      Delete
    2. நான் ஒரு தடவை தான் எனது comment செய்ததாக நினைத்து கொண்டிருக்கின்றேன்
      ஆனால் பல தடவை தவறுதலாக அழுத்தி இருக்கின்றேன் போல்.
      மேலே பல நீக்கப்பட்டுள்ளன
      எனது தவறுக்கு மன்னிக்கவும்

      அன்புடன்
      ரியாஸ்

      Delete
    3. இல்லை. நீக்கப்பட்டவை எல்லாம் ஒரு கோழை அனானியின் வக்கிரங்கள்

      Delete