Tuesday, April 16, 2019

அதிமுக விற்கு 'வட" போச்சே


புலி வருது என்று சொல்லப்பட்டு வந்தது. கடைசியில் புலி வந்து விட்டது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டது.

இதன் மூலம் வேலூரைத் தவிர மீதமுள்ள முப்பத்தி எட்டு 
தொகுதிகளிலும் தமிழகத்தில் பணப்புழக்கம் இல்லாமல்  நேர்மையாக தேர்தல் நடக்கப் போவது போன்றதொரு தோற்றத்தை  உருவாக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது.
இதுதான் நேர்மையற்ற செயல்.

இந்த முடிவின் மூலம் யாருக்கு பாதிப்பு?

வேலூர் தொகுதியைச் சேர்ந்தவன் என்ற முறையில் நிச்சயமாகச் சொல்வேன்.

பாதிப்பு, பாவம் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் ஏ.சி.சண்முகத்திற்குத்தான்.

பல இடங்களிலிருந்து கிடைக்கும் தகவல் படி அதிமுக தான் தன்னுடைய பணப் பட்டுவாடாவை கடந்த சனி, ஞாயிறு அன்றே முடித்து விட்டது. ஐநூறு முதல் ஆயிரத்து ஐநூறு வரை ஒரு வோட்டுக்கு தரப்பட்டதாக தகவல். கூடுதல் தொகை என்பது வேலூர் மக்களவைக்கு உட்பட்ட சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு.

ஆக மொத்தம் அவர்கள் கொடுத்த பணம்தான் விரயம்.

அவங்களுக்குத்தான் "வட போச்சே" நிலை. 

4 comments:

  1. கம்யூனிஸ்ட்களுக்கு இந்த தடவை அச்சம் இல்லை
    வெங்கடேசன் என்னும் கல்குவாரி மாபியா ஆதரவாளர் தேர்தலில் போட்டியிடுகின்றார்

    K.பரமசிவம்

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை. அடிமை ரத்தம் ஊறியவர்களுக்குக் கூட கற்பனை சக்தியும் நகைச்சுவையுணர்வும் இருக்கிறது. Good. Keep it up

      Delete
    2. சார்
      இந்த அடிமை வேறு யாருமல்ல
      அதிமுக அடிமை அதோட நம்ம கவிஞர் தாமரைக்கு முகநூலில் காதல் கவிதை எழுதியவன்
      அந்தம்மா இவனை திட்டி தீர்த்தாங்க
      வளைகுடாவில் வாழும் அரை லூசு

      Delete
  2. உங்களுடைய பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். மிக மிக நன்றாக எழுதுகிறீர்கள்! நான் எப்பொழுதும் தமிழ் வலைப்பதிவகம் வாட்சப்புக் குழு மூலமாகவே உங்கள் பதிவுக்கு வருவதாலும் என் கைப்பேசியிலிருந்து கருத்திடுவதில் எனக்குச் சில சிக்கல்கள் இருப்பதாலும் கருத்து தெரிவிக்க முடிவதில்லை. இன்று கணினி மூலமாக வந்ததால் கருத்திடுகிறேன்.

    ReplyDelete