ஆமாம்.
பாரதீய
ஜனதா கட்சி
இனி
தன்னுடைய
பெயரை
தீசாக
என்று
மாற்றிக்
கொள்ளட்டும்.
ஆமாம்.
தீவிரவாதி
சாமியார் கட்சி
என்ற
பெயர்தான் அதற்கு பொருத்தமாக இருக்கும்.
ஆறு
பேர் உயிரிழந்த, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த மாலேகான் வெடிகுண்டு வழக்கில் பிரதான குற்றவாளியான சாத்வி பிராக்யா முதல் நாள்
அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைகிறார். மறு நாள் அவர் போபால் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக
அறிவிக்கப் படுகிறார்.
மார்பகப்
புற்று நோய் என்று காரணம் சொல்லி நீதி மன்றத்தில்
பிணை வாங்கியவர், அதே நோயின் காரணமாக தன்னால் நடமாட முடியவில்லை என்று நீதிமன்ற வழக்கு
விசாரணையில் பங்கேற்பதிலிருந்து விலக்கு பெற்றவர் இப்போது இந்த வெப்பக்காலத்தில் அனல்
பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளார்.
தீவிரவாதத்தை
எதிர்ப்பதாக வெறுமனே வாயால் வடை சுடும் கட்சிதான் பாஜக என்று மீண்டும் அதை அம்பலப்படுத்திக்
கொண்டிருக்கிறது. வெடி குண்டு வைத்த ஒரு தீவிரவாதியை
தன் கட்சியில் இணைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பளித்ததன் மூலம் பாஜகவின்
தீவிரவாத எதிர்ப்பு முகத்திரை கிழிந்து விட்டது.
அதனால்
பாஜக
தன்னுடைய
பெயரை
தீவிரவாதி
சாமியார் கட்சி
என்று
மாற்றிக் கொள்வதுதான் சிறப்பாக இருக்கும்.
அந்த
சாமியாரின் திமிர் பற்றி இன்னும் எழுத வேண்டியுள்ளது. அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete