Friday, April 12, 2019

கேள்விக்கு கள்ள மவுனமே பதிலாம் . . .

ஞாபகம் வருதே 8 

அர்த்தமுள்ள கேள்விகளும் அரசின் கள்ள மவுனமும்



இன்சூரன்ஸ் மசோதா மீது நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தோழர் தபன் குமார் சென்(பொதுச்செயலாளர்சி..டி.யுபேசியதன் தமிழாக்கம் கீழே உள்ளது. 



 பல முக்கியமான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். ஆழமான பல கருத்துக்களையும் அவர் முன்வைத்துள்ளார். கொடுமை என்னவென்றால்  அவர்    எழுப்பிய  எந்த ஒரு கேள்விக்கும்  மத்தியரசு  பதில் சொல்லவில்லை. நியாயமான பதில் எதுவும் கிடையாது  என்பதுதான் உண்மை. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வால் பிடிப்பதற்காக தேசத்தின் நலனை புறக்கணித்து விட்டு யோக்கியர்கள் போல பேசுவதுதான் மோடி அரசின் வாடிக்கை. இந்த கருத்துக்களைச் சொல்வதற்கான நேரத்தைப் பெறுவதற்குக் கூட அவர் எப்படியெல்லாம் மன்றாட வேண்டியிருந்தது என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.



தோழர் தபன் குமார் சென் மரியாதைக்குரிய துணைத் தலைவர் அவர்களேஎன் கருத்துக்களைச் சொல்வதற்கான போதிய நேரத்தை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்இந்த மசோதாவை முழுமையாக எதிர்ப்பதற்காக நான் எழுந்துள்ளேன்.இதனை இந்த அவை நிராகரிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்இந்த மசோதா ஒவ்வொரு மட்டத்திலும் தேசத்தின் அடிப்படை நலன்களை  பாதிக்கும்அதிக இன்சூரன்ஸ் ஊடுறுவல்அதிகமான மக்களுக்கு மருத்துவக் காப்பீடுஇத்யாதி இத்யாதி எல்லாம் நிகழ்வதுதான் இந்த மசோதாவின் நோக்கம் என்று மசோதாவை அறிமுகம் செய்கிற போது மாண்புமிகு நிதியமைச்சர் கூறினார்.

இந்த மசோதாவின் நோக்கம்இலக்கு பற்றியெல்லாம் நான் வேறு ஒரு விளக்கம் வைத்துள்ளேன்அன்னிய நேரடி மூலதன வரம்பை உயர்த்துவதுபொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாக்குவது ஆகியவைதான் இந்த மசோதாவின் நோக்கம்இந்த இரண்டு குறிக்கோள்களோடுதான் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளதுநாட்டு நலனுக்கு எதிராக வேறு பல அம்சங்களும் இந்த மசோதாவில் உள்ளது.

முதலில் அன்னிய நேரடி மூலதன வரம்பை உயர்த்தும் பிரச்சினையைப் பார்ப்போம்.அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவதன் மூலம் இந்திய இன்சூரன்ஸ் கம்பெனிகளில் அன்னியக் கூட்டாளியின் நிலையை வலுப்படுத்துகிறீர்கள்யாரந்த கம்பெனிகள்யார் இங்கே வரப் போகின்றனர்?  அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கிற பெரும்பான்மையான பகாசுர நிறுவனங்கள் இங்கே ஏற்கனவே இந்திய தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு இந்திய மண்ணில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனஅவர்கள் இந்திய இன்சூரன்ஸ் சந்தையில் அனுமதிக்கப்பட்ட பின்பு இந்தியாவில் காப்பீட்டை பரவலாக்க அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்இன்சூரன்ஸ் ஊடுறுவலில் அவர்களின் பங்களிப்பு என்ன?

ராம்கோபால்ஜி மிகச் சரியாக சுட்டிக்காட்டினார்அன்னிய மூலதனம் அதிகரிக்க அதிகரிக்கதனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் ஆதிக்கம் வளரவளர இன்சூரன்ஸ் ஊடுறுவல் என்பது குறைந்து கொண்டே வருகிறதுஏனென்றால் அன்னியக் கூட்டாளிகளோடு செயல்படும் இந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளெல்லாம் அடிப்படையில் மாநகரப் பகுதிகளில் மட்டுமே செயல்படுகின்றனசமூகத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களை மட்டுமே கணக்கில் கொண்டு இயங்குகின்றனஇவர்கள் நகரங்களுக்கோ இல்லை கிராமங்களுக்கோ ஏழை மக்களுக்கு காப்பீடு வழங்க செல்வது கிடையாதுஇதுதான் யதார்த்தம்அப்படியே ஓரிரு இடங்களுக்கு பயிர்க் காப்பீடு போன்றவற்றை வழங்க போயிருந்தாலும் அங்கே ஊழலும் மோசடியும்தான் நடந்திருக்கிறதுஇது நிதியமைச்சக ஆவணங்களிலேயே இருக்கிறதுநாங்கள் பிரச்சினையை கையிலெடுத்ததால் அவர்களால் ஊழல்களை மூடி மறைக்க முடியவில்லைகடிதங்கள் மேல் கடிதங்கள் அனுப்பியதால் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கான பிரிமியமாக அரசு கஜானாவிலிருந்து அள்ளிக் கொடுக்கப்பட்ட நிதியை திரும்பிப் பெற வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்காக பெற்ற பணத்தை அவர்கள் திருப்பித் தர வேண்டியிருந்ததுஏழை மக்களின் காப்பீட்டிற்காக அவர்கள் எங்கெங்கு நுழைந்தார்களோ அங்கேயெல்லாம் ஊழல்கள் மட்டுமே நிகழ்ந்ததுஉங்களது அன்னிய மூலதனம் அதிகரிக்கும்போதெல்லாம் உங்களின் இன்சூரன்ஸ் ஊடுறுவல் குறைந்து போகிறது என்பதை இது விளக்குகிறதுமுன்பு அது 5 %   தற்போது 3.1% ஆக உள்ளது49 %  த்தில் இது கண்டிப்பாக ஒரு சதவிகிதத்திற்கும் கீழே செல்லும்இதுதான் இன்சூரன்ஸ் ஊடுறுவலின் கதைபொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்களிப்பால்தான் இன்று இன்சூரன்ஸ் ஊடுறுவல் இந்தியாவில் 3.1% ஆக உள்ளது3.1%  இன்சூரன்ஸ் ஊடுறுவல் உள்ள அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலைமை நன்றாகவே உள்ளது.

நூறு சதவிகித அன்னிய மூலதனம் உள்ள அமெரிக்காவிலும் என் நண்பர் சந்தன் மித்ரா சொன்னது போல இன்சூரன்ஸ் ஊடுறுவல் 3.1 % ஆக உள்ளதுஇந்தியாவிலோ இன்சூரன்ஸ் ஊடுறுவல் 3.17 %  ஆக உள்ளதுஇப்படி இருக்கையில் ஏன் இந்த சோதனை?இன்சூரன்ஸ் வணிகத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் மூலதனம் அவசியமில்லை.இன்சூரன்ஸ் வணிகத்தின் மூலதனம் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பிரிமியம் மற்றும் பிரிமியத்தோடு இணைந்த சேமிப்புதான்

(மணி ஒலிக்கிறது)

துணைத்தலைவர் (திரு வி.பி.பத்னோர்) : இன்னும் இரண்டு நிமிடங்கள்

தோழர் தபன் குமார் சென் இல்லையில்லைநான் எனது வாதங்களை முழுமையாகச் சொல்ல அனுமதிக்க வேண்டும்இல்லையென்றால் நான் இங்கேயே உட்கார்ந்திடுவேன்

>>> இடையூறுகள்>>>

துணைத்தலைவர் கூடுதலாக இன்னும் எத்தனை நிமிடங்கள் உங்களுக்கு தேவைப்படுகிறத்?

தோழர் தபன் குமார் சென்நான் என் கருத்துக்கள் அனைத்தையும் சொல்லி முடிக்க வேண்டும்அதற்கு நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்.

தோழர் டி.கே.ரங்கராஜன் (சி.பி.(எம்): எதிர்கட்சிகளின் கருத்துக்களையும் அரசாங்கம் கேட்கட்டும்.

துணைத்தலைவர்சரிஉங்களுக்கு நான்கு நிமிடங்கள் தரப்பட்டதுஇரட்டிப்பு நேரம் தருகிறேன்அதற்கு மேல் கிடையாது.

தோழர் தபன் குமார் சென் இல்லை ஐயாநான் எனது கருத்துக்களை முழுமையாக சொல்ல வேண்டும்.

துணைத்தலைவர் தயவு செய்து தொடருங்கள்தொடருங்கள்..

>>> இடையூறுகள்>>>

தோழர் தபன் குமார் சென் இரண்டு நிமிடங்கள் போய் விட்டது.

துணைத்தலைவர்நான் என்ன செய்ய முடியும்விதிகளின் படி இயலாது.

தோழர் தபன் குமார் சென் ஐயாஎன்னுடைய இரண்டாவது வாதம் என்னவென்றால் யார் இவர்கள்இவர்கள் எல்லோரும் தங்கள் நாடுகளில் திவாலானவர்கள்அத்தனை பேரும் தங்கள் நாட்டில் திவாலானவர்கள்அந்த நாட்டு அரசாங்கங்கள் தனது கஜானாவிலிருந்து அளித்த மீட்பு நிதியால் உயிர் பிழைத்தவர்கள்இப்போது 49 %உயர்வின் மூலம் ஏழை இந்திய அரசாங்கம் தனது கஜானாவிலிருந்து அவர்களுக்கு கூடுதல் மீட்பு நிதி அளிக்கிறதுதிவாலான கம்பெனிகளுக்கு இந்திய அரசு அளிக்கும் கூடுதல் மீட்பு நிதி என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.

எனவே அவர்கள் இங்கு வருவார்கள்இந்திய மக்களின் சேமிப்பை இன்சூரன்ஸ் என்ற பெயரில் வசூலிப்பார்கள்தங்கள் சொந்த தொழிலைப் பார்ப்பார்கள்இந்திய நுகர்வோரை பாதித்து நீங்கள் அவர்களுக்கு கூடுதல் மீட்பு நிதி அளிக்கிறீர்கள்இது தேசத்தின் நலனுக்கு எதிரானதுஇதற்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்ஒரு நிறுவனத்தின் நிகர மதிப்பைக் கணக்கிட இந்தியாவிற்கு வெளியே உள்ள சொத்தின் மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது என்ற ஷரத்து இருந்ததுபாதுகாப்பு கருதி முந்தைய சட்டத்தில் கொண்டு வரப்பட்ட ஷரத்து அதுஅதைக் கூட நீக்கி விட்டார்கள்

(மணி ஒலிக்கிறது)

ஐயாஅன்னிய நலன்களுக்கு  அடிபணிவது என்பது ஒரு தேச விரோத அம்சத்தை மசோதாவில் இணைக்கிற அளவிற்கு சென்றுள்ளதுஒரு வெளிநாட்டுக் கம்பெனியின் நிகர மதிப்பைக் கணக்கிட இந்தியாவிற்கு வெளியே உள்ள சொத்துக்களும் எடுத்துக் கொள்ளப்படும் என்ற ஷரத்து சேர்க்கப்பட்டிருக்கிறதுஅந்த கம்பெனி திவாலாகிப் போனால் வெளிநாட்டில் உள்ள அந்த சொத்தை நீங்கள் தொடக்கூட முடியாதுமுன்பு இருந்த ஷரத்தைகட்டுப்பாட்டை நீங்கள் வேண்டுமென்றே நீக்கியுள்ளீர்கள்.இந்தியாவிற்கு வெளியே உள்ள சொத்துக்களையும் கணக்கிட அனுமதிக்கிறீர்கள்ஐயா,இதன் மூலம் நமக்கு என்ன பலன் கிடைக்கும்தேசத்திற்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?

இந்த மசோதாவில் உள்ள இரண்டாவது அம்சம்நீங்கள் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கதவுகளை தனியாருக்கு திறந்து விடப் பார்க்கிறீர்கள்.நிதியாதாரங்களை திரட்டுவது என்ற பெயரில் பங்கு விற்பனையை கொண்டு வருகிறீர்கள்.

(மணி ஒலிக்கிறது)

உங்கள் இருக்கைக்கான அனைத்து மரியாதைகளோடும் கேட்கிறேன்தயவு செய்து என்னை தொடர்ந்து பேச அனுமதியுங்கள்.

தோழர் பி.ராஜீவ் (சி.பி.(எம்) : ஐயாகாலையில் ஒரு உடன்பாடு உருவாகியிருந்தது.நாடாளுமன்ற  விவகாரத்துறை அமைச்சரும் இங்கேதான் இருக்கிறார்.

>>> இடையூறுகள்>>>

துணைத்தலைவர் உங்களுக்கு நான்கு நிமிடம் ஒதுக்கப்பட்டதுநான் உங்களுக்கு இரட்டிப்பு நேரம் கொடுத்துள்ளேன்இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது.

தோழர் பி.ராஜீவ் (சி.பி.(எம்):  ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறதுஅமைச்சர் இங்கே உள்ளார்.

>>> இடையூறுகள்>>>

துணைத்தலைவர் உங்களுக்கு நான் இரட்டிப்பு நேரம் கொடுத்துள்ளேன்.

தோழர் தபன் குமார் சென்மூன்றாவதாகநீங்கள் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனையை அனுமதிக்க உள்ளீர்கள்அதில் பிரச்சினை

>>> இடையூறுகள்>>>

துணைத்தலைவர் மிகவும் நன்றி

>>> இடையூறுகள்>>>

இன்னும் இரண்டு நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்

>>> இடையூறுகள்>>>

ஆனால் இது முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்க முடியாதுமுடிவில்லாமல் போய்க் கொண்டிருக்க முடியாது

தோழர் தபன் குமார் சென் நீங்கள் ஜி..சி யின் பங்குகளை விற்கப் போகிறீர்கள்.அவர்களுக்கு நிதி தேவைப்படுகிறதாஇதில் என்ன தர்க்கம் இருக்கிறது?சந்தையிலிருந்து நிதியாதாரத்தைத் திரட்ட அவர்கள் பங்குகளை விற்க வேண்டுமாம்.சந்தையிலிருந்து நிதியைத் திரட்ட எத்தனையோ வழிகள் இருக்கிற போது ஏன் பங்குகளை விற்க வேண்டும்ஏனென்றால் தனியார் முதலாளிகள் அவர்களது நிர்வாகத்தில் வந்து அமர்ந்து கொண்டு அவர்களின் வெற்றிகரமான செயல்பாட்டை முடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களேதயவு செய்து ஜி..சி யின் நிதி நிலைமை என்ன என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்அவர்கள் வசம் உள்ள பெருத்த நிதியாதாரம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்சந்தையில் அவர்களுக்கு உள்ள நம்பகத்தன்மை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்நிதி நிறுவனங்களிடம் அவர்களுக்குள்ள நம்பகத்தன்மை பற்றி புரிந்து கொள்ளுங்கள்சொல்லப் போனால் நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுமே நம்பகத்தன்மை உடையதாகத்தான் உள்ளது.அவர்களின் கடனுக்கும் மூலதனத்திற்கான விகிதம் என்பது 5.5% அல்லது 5.7 % க்கு குறைவாகவேதான் உள்ளது.

பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நம்பகத்தன்மை என்பது அது கடன் சந்தையாக இருந்தாலும் சரி இல்லை வங்கிச் சந்தையாக இருந்தாலும் சரிசிறப்பாகவே உள்ளதுஅவர்களுக்கு நிதியாதாரத்தில் எந்த குறையும் கிடையாதுஅப்படியே தேவையென்றாலும் அவர்களால் சந்தையிலிருந்து திரட்ட முடியும்அதற்காக அவர்கள் பங்குகளை விற்கவோ இல்லை தங்களின் நிர்வாக உரிமைகளை விட்டுத்தரவோ அவசியமில்லைதனியார்மயத்திற்கு கதவுகளை திறக்கவே நீங்கள் இதைச் செய்கிறீர்கள்இதுதான் உங்களின் அடிப்படைத் தத்துவம்அடுத்தபடியாக திறமை என்பதைப் பற்றி..

துணைத்தலைவர் நன்றிநீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள்ஆனால் என்னால் உதவ முடியாதுநீங்கள் நிறைவு செய்தாக வேண்டும்.

தோழர் தபன் குமார் சென் ஐயாநான் உட்கார தயாராக இருக்கிறேன்ஆனால் நீங்கள்தான் நான் பேசலாம் என்று சொன்னீர்கள்அதனால்தான் நான் என் உரையை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

துணைத்தலைவர் சரி இன்னும் அரை நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள்

தோழர் தபன் குமார் சென் ஐயாதிறமை என்ற கேள்விக்கு வந்தால்அன்னியக் கூட்டாளிகளுடனான நமது தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை திறமையான செயல்பாட்டிற்கு எங்காவது ஒப்பிட முடியுமா..ஜிஃபோர்டிஸ் ஆகிய நிறுவனங்கள் எல்லாம் நம் நாட்டில் செயல்பட்டார்கள்அவர்களின் செயல்பாட்டை ஒப்பிட்டுப் பாருங்கள்எல்..சி யால் நிராகரிக்கப்பட்ட கேட்புரிமங்கள் வெறும் 1 %.   ஆனால் அனைத்து தனியார் கம்பெனிகளிலும் நிராகரிக்கப்பட்டவை 20 % முதல் 33 % வரை உள்ளதுஅவர்களுடைய காலாவதியான பாலிசிகளின் சதவிகிதம் 47%.  பாலிசிகள் காலாவதியாகிறது என்றால் அதன் அர்த்தம் என்னவேகமான வணிக உத்திகள் மூலம்,போன்சி Ponzi) என்றழைக்கப்படுகிற சங்கிலித் தொடர் மூலம் பணத்தை வசூலிக்கின்றனர்பெரும்பாலான தனியார் காப்பீட்டுக் கம்பெனிகளில் 60 % க்கும் மேற்பட்ட வணிகம் போன்சிக்கள் மூலம்தான் வருகின்றதுஅவர்களின் வணிக உத்திகள் காரணமாக மக்கள் பாலிசிகள் எடுக்கின்றனர்அதற்குப் பிறகு தொடர்ந்து பணம் செலுத்த முடியாமல் அவை காலாவதியாகிப் போய்விடுகிறதுஅவர்கள் முதலில் செலுத்திய பணம் முழுதும் தனியார் கம்பெனிகளில் கல்லாப்பெட்டிகளுக்குப் போய்விடுகிறது.

இதுதான் நாம் முன்னிறுத்துகிற “திறமையான செயல்பாடு”இதனை “மேலும் திறம்பட” செய்வதற்காக அவர்கள் அன்னிய முதலீட்டாளர்களை வரவேற்று ஒட்டுமொத்த இன்சூரன்ஸ் துறையையும் தனியார்மயமாக்க முயற்சிக்கின்றனர்.  ஐயாஇது நாட்டின் நலனுக்கு உகந்ததல்லநிதிப் பொருளாதாரத்திற்கு ஏற்றதல்லஇந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு நான் அரசை வற்புறுத்துகிறேன்எல்..சி சேர்மனின் அறிக்கையோடு குழப்பிக் கொள்ள வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

9, மார்ச்2015 அன்று எல்..சிஜி..சி யில் உள்ள இடதுசாரிவலதுசாரிஏன் உங்களது சங்கம் உட்பட  என்று அனைத்து தொழிற்சங்கங்களையும் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் இம்மசோதாவிற்கான தங்கள் எதிர்ப்பை 100 % வேலை நிறுத்தம் மூலமாக தெரிவித்துள்ளனர்நீங்கள் மசோதாவை வேண்டுமானால் நிறைவேற்றலாம்ஆனால் அதன் பின்பு அமலாக்கும் வேளையில் பணியிடங்களில் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்ஒரு தொழிற்சங்கவாதியாக நான் அரசிற்கு இந்த எச்சரிக்கையை விடுக்க வேண்டியுள்ளது – தயவு செய்து அத்திசை வழியில் செல்லாதீர்கள்மசோதாவை கைவிடுங்கள்திரும்பப் பெறுங்கள் என்று நான் அரசை வற்புறுத்துகிறேன்இந்த வேண்டுகோளோடு என் உரையை முடித்துக் கொள்கிறேன்.நன்றி.     

ஞாபகம் வருதே 9 


மோடிஜியால் தன் நண்பர்களை கண்டிக்க முடியுமா?





இந்திய தொழிலகங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் அவர்கள் எழுதியுள்ள ஒரு சிறப்பான கட்டுரையின் தமிழாக்கத்தை கீழே அளித்துள்ளேன்.



அவர் என்னமோ சூடாகத்தான் கேட்டுள்ளார். ஆனால் இந்த சூட்டை மோடி வகையறாக்கள் உணர்ந்து கொள்வார்களா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.

பிரதமர் மோடி, இந்த முதலீட்டையாவது திரும்பக் கொண்டு வர முடியுமா?
                                                               
டிக்கடி நிகழும் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரது பயணத்துணையாக இந்தியாவின் சக்தி மிக்க செல்வந்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலதிபர்கள் இடம் பெறுகின்றனர். நமது நாட்டின் மிகச் சிறந்த தூதர்களா அவர்கள்?

இங்கிலாந்தில் உள்ள பதினெட்டாயிரம் எஃகு தொழிலாளர்கள் அவ்வாறு கருத வாய்ப்பில்லை. 2007ல் அந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருந்த கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை டாடா 12பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். முப்பது வருடங்களாக இங்கிலாந்தில் உள்ள எந்த ஒரு ஸ்டீல் துறை முதலாளியும் செய்ய முடியாத ஒரு சாதனையை ஏழே ஆண்டுகளில் டாடா நிகழ்த்தியுள்ளார். வேலை நிறுத்த கருத்துக் கணிப்புத் தேர்தலை நோக்கி தங்கள் தொழிலாளர்களை தள்ளியிருப்பதுதான் அந்த சாதனை. தங்கள் உரிமைகளை முடக்க முயலும் நிர்வாகத்தின் முரட்டுத்தனமான அணுகுமுறைக்கு எதிராக “காலவரையற்ற வேலை நிறுத்தம்” மேற்கொள்ளலாமா என்ற “வேலை நிறுத்த கருத்துக் கணிப்பு தேர்தல்” மே முதல் மே 29 வரை நடக்கப் போகிறது. இதற்கான முறையான தாக்கீது ஏப்ரல் 29 அன்று  நிர்வாகத்திடம் வழங்கப்பட இருக்கிறது.

அங்கே உடனடிப் பிரச்சினையாக பென்ஷன் திட்டம் உள்ளது. இங்கிலாந்தில் ஒட்டு மொத்த ஸ்டீல் துறைக்குமாக பிரிட்டிஷ் ஸ்டீல் பென்ஷன் திட்டம் உள்ளது. அறுபது வயதில் ஓய்வு பெறும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தில் எட்டு சதவிகிதமும் முதலாளிகள் கொடுபடாத ஊதியம் (Deferred Wage) என்ற அடிப்படையில் பனிரெண்டு சதவிகிதமும் அளிப்பார்கள். டாடா தொழிலாளர்கள் 65 வயது வரை வேலை பார்க்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார். அப்படி தொழிலாளர்கள் 60 வயதில் ஓய்வு பெற விரும்பினால் அவர்கள் தங்களுக்கான பென்ஷனின் 25 % வெட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அங்கேயுள்ள தொழிலாளர்கள் இதைக் கணக்கிட்டுப் பார்த்து ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பவுண்ட் (இந்திய மதிப்பில் 90 லட்சம் ரூபாய்) வரை இழப்பு நேரிடும் என்று கண்டறிந்துள்ளனர். டாடாவிற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை தோல்வியடைந்து விட்டது. ஒட்டு மொத்த பென்ஷன் திட்டத்தையே ரத்து செய்யப்போவதாய் இப்போது டாடா மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

“என் உள்ளம் கேட்கும் இன்னும்” என்ற விளம்பர வாசகத்தின்  மீது மிகுந்த பற்றுள்ள இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் லாபத்தை அதிகரிக்க உழைப்பாளர்களின் ஊதியங்கள், உரிமைகள், சலுகைகளை வெட்ட வழிவகுத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வைப்பதை நிறுத்திக் கொள்ளவே மாட்டார்கள். இந்த தத்துவத்தை உள்ளடக்கியதுதான் மோடியின் “இந்தியாவில் உருவாக்குவோம்” முழக்கம். தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் என்ற ஆசையைக் காட்டித்தான் மோடி உலகெங்கிலும் அன்னிய முதலீட்டாளர்களை இந்தியாவிற்கு வரச் சொல்லி அழைப்பு விடுக்கிறார்.

தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் என்பது வேறொன்றுமில்லை, காலம் காலமாக போராட்டங்கள் மூலமாக தியாகங்கள் பல புரிந்து உழைக்கும் வர்க்கம் பெற்ற பல உரிமைகளை பறிப்பதற்கு வைத்துள்ள அலங்காரமான பெயர்தான். குறைந்தபட்ச ஊதியத்திற்கான உரிமை, போனஸ் பெறும் உரிமை, பென்ஷனுக்கான உரிமை, பணிப் பாதுகாப்பு உரிமை என அனைத்து உரிமைகளுமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இந்த உரிமைகளைப் பறிப்பதற்கான முதல் முயற்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் பல தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் செய்யப்பட்டது. அவர்களது முயற்சி தோற்றுப் போனது. இப்போது மோடி அரசு மக்களவையில் அதற்குள்ள மூர்க்கத்தனமான பெரும்பான்மை மூலமாக சில திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது.

தன்னிச்சையான பணி நீக்கம், ஊதிய வெட்டு, சலுகை வெட்டு போன்ற அராஜகங்களுக்கு எதிரான சட்டபூர்வமான பாதுகாப்பை எழுபது சதவிகித தொழிலாளர்களிடமிருந்து பாஜக தலைமையிலான ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஹிமாச்சல் பிரதேஷ் அரசாங்கங்கள், மிகவும் பிற்போக்குத்தனமான திருத்தங்கள் மூலமாக பறித்திருக்கின்றன.

உற்பத்திச் செலவில் தொழிலாளர்களுக்கான செலவு என்பது இந்திய வரலாற்றிலேயே இப்போதுதான் மிகௌம் குறைவாக உள்ளது. மத்திய தொழிலாளர் ஆணையத்தின் சிறப்பு வெளியீட்டின்படி 2011-12 ம் ஆண்டில் ஒட்டு மொத்த உற்பத்திச் செலவில் தொழிலாளர்களுக்கான செலவு என்பது வெறும் 5.25 % மட்டுமே இருக்கிறது. ஏற்கனவே வேகமாக சுருங்கிக் கொண்டு வரும் இந்த பங்கை, தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் இன்னும் சுருக்கி விடும்.

தொழிலாளர்களை பணியமர்த்தும் முறையில் மாற்றங்கள், பணிகளை வெளியில் கொடுத்து வாங்கிக் கொள்வது, நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த ஊழியர்களை அமர்த்துவது, நினைத்தால் பணியில் அமர்த்தி அகற்றுவது போன்றவை முதலாளிகளின் முழுமையான உரிமையாக இருக்க வேண்டும் என்றும் இதற்குக் குறுக்கே எந்த விதமான தொழிலாளர் நலச் சட்டமும் இடையூறாக இருக்கக் கூடாது என்பதுதான் உலகம் முழுதிலுமுள்ள முதலாளிகளின் கோரிக்கை. பிரதமரின் “இந்தியாவில் உருவாக்குவோம்” முழக்கம் அவர்களுக்கு இவை அனைத்தையும் மட்டுமல்ல அதற்கு மேலும் கூட உறுதியளிக்கிறது.

வெளிநாடுகளில் முதலீடு செய்யும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களோடு இந்த தொழிலாளர் விரோத நடைமுறைகளையும் எடுத்துச் சென்று அந்நாட்டு தொழிலாளர்கள் மீது திணிக்கப் பார்க்கின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளை துச்சமாக மதிப்பது என்பதுதான் நவீன தாராளமயக் கொள்கைகளின் ஊதுகுழல்களாக இருக்கிற இங்கிலாந்து மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் அரசுகளின் புரிதலாக இருக்கிறது. உலகம் முழுதுமே கார்ப்பரேட் நிறுவனங்கள் தாக்குதல் நடத்தும் அரங்கமாக மாறி வருகிறது. இந்த கருத்தோட்டத்திற்கு எதிரான சவாலை இங்கிலாந்தின் ஸ்டீல் தொழிலாளர்கள் விடுத்துள்ளனர். அவர்களின் போராட்டம் வெல்ல வேண்டும் என்று   இந்தியாவில் உள்ள உழைப்பாளி மக்கள், ஏன் உலகெங்கும் உள்ள உழைப்பாளிகள்  விரும்புகின்றனர். ஒவ்வொரு போராட்டமும் இன்னொரு போராட்டத்திற்கு உரமேற்றுகிறது, போராட்டம் நடக்கும் இடம் எதுவாக இருந்தாலும் கூட.

இறுதியாக ஒரு வார்த்தை. இந்தியாவில் உருவான தொழிலகங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குப் பதிலாக இந்தியாவிலேயே முதலீடு செய்தால்தான்  “இந்தியாவில் உருவாக்குவோம்” என்ற முழக்கத்திற்கு கொஞ்சமாவது நம்பகத்தன்மை கிடைக்கும். முதலாளிகள் கூட்டமைப்பான அசோகம் நவம்பர் 2014 ல் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி ஏப்ரல் முதல் செப்டம்பர் 2014வரை (மோடி மே 2014 ல் பிரதமராக பொறுப்பேற்றார்) இந்திய நிறுவனங்கள் 17.6 பில்லியன் டாலர்கள் ( 1,14,400 கோடி ரூபாய்) அன்னிய மண்ணில் முதலீடு செய்துள்ளது. 2013- 2014நிதியாண்டில் மட்டும் 36 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக ( 2,34,000 கோடி ரூபாய்) முதலீடு வெளி நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த முதலீட்டை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வாருங்கள் பிரதமரே. அது உங்களால் முடியாவிட்டால் “இங்கிலாந்தில் ஸ்டீல் தொழிலாளர்களுக்கு எதிராக டாடா கடைபிடிக்கிற மோசமான அணுகுமுறை” போல நடந்து கொண்டு இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுவதையாவது நிறுத்திக் கொள்ளுமாறு உங்கள் நண்பர்களை வெளிப்படையாக கண்டிக்கவாவது செய்யுங்கள்.

No comments:

Post a Comment