Tuesday, April 2, 2019

மரண பயத்தை காட்டிட்டாங்களா மோடி?



"நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்'



என்றொரு புத்தகத்தின் வெளியீட்டு விழா இப்போது சென்னையில் பாரதி புத்தகாலயத்தின் அலுவலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

ரபேல் ஊழல் தொடர்பான ஆவணங்களை அம்பலப்படுத்திய என்.ராம் அவர்கள்தான் வெளியிட உள்ளார்.

இப்படி ஒரு புத்தகம் வெளியிடப்படுகிறது என்று அறிந்ததும் பாஜக ஆடிப் போய் விட்டது.

நூல் வெளியீட்டு விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கங்களை எல்லாம் காவல் துறை மிரட்டி விட இறுதியில் பாரதி புத்தகாலய அலுவலகத்திலேயே விழா நடைபெறும் என்று அறிவித்ததும்

சங்கிகள் ஏவல் படையை ஏவி விட்டார்கள்.

பாரதி புத்தகாலயத்துக்குள் நுழைந்த காக்கிச்சட்டைகள் விழாவிற்கு அனுமதி கிடையாது என்று அறிவித்தது மட்டுமல்லாமல் இருந்த அனைத்து நூல்களையும் பறிமுதல் செய்து எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்கள்.




கடுமையான எதிர்ப்பு வலுத்ததும் எடுபிடி ஆணையம் பல்டி அடித்து விட்டது. கையெழுத்து போட்டு கடிதம் கொடுத்த அந்த கணேஷ் என்ற அதிகாரி பலியாடு ஆகப் போகிறார். பாவம்.

ரபேல் விவகாரத்தில் ஊழல் இல்லையென்றால் பாஜகவிற்கு ஏனய்யா இவ்வளவு பதட்டம்?

அந்த புத்தகத்தை வெளியிடுவதில் என்னய்யா தேர்தல் விதி மீறல்?

மோடியை பொய்யாய் புகழும் விவேக் ஓபராய் படத்தை வெளியிடுவதில் இல்லாத மீறல்!

எப்போதோ நிகழ்ந்த சாதனையை தான் நிகழ்த்தியதாய் பொய் சொல்லும் மோடி செய்த மீறலை கண்டுகொள்ளாதது இந்த எடுபிடி ஆணையம்.

மொத்தத்தில் ரபேல் விவகாரங்கள் வெளி வருவதிலும் அந்த உண்மைகள் பரவுவதிலும் பாஜகவிற்கு மரண பயம் வந்து விட்டது.

நேர்மையானவர்களாக இருந்திருந்தால் இப்படி கீழ்த்தரமாக இறங்க வேண்டிய அவசியம் ஏன் வந்திருக்கப் போகிறது!

ஆனால் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அவர்களது நடவடிக்கைதான் ரபேலில் ஊழல் நடந்திருப்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலம்.

அதே போல இந்த நூலிற்கு இவ்வளவு விளம்பரமும் கிடைத்திருக்காது. 



3 comments:

  1. மடியில் கனம். வழியில் பயம்

    ReplyDelete
  2. தப்பு செய்யவில்லை என்றால் எதுக்கு பயப்படனும்?

    ReplyDelete