Saturday, April 6, 2019

இதெல்லாம் கேவலம் பொன்னார்


குமரி மாவட்டத்தில் பாஜக ஏதோ கொஞ்சம் வலிமையாக இருக்கிறது என்றால் அக்கட்சிக்காரர்கள் காலம்காலமாக இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும்  எதிராக நடத்தி வரும் நச்சுப் பிரச்சாரம் மட்டுமே காரணம்.

இப்படி ஒரு மாவட்டத்தையே மத வெறி ஏற்றி வைத்திருக்கிற பாஜக தேர்தல் வந்தால் மட்டும் மாற்று மதத் தலைவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் கேட்கக் கூட கூச்சப்படுவதில்லை. 

சரி, இதையெல்லாம் கூட

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா 
என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் இப்போது  செய்துள்ள காரியம் மிகவும் கேவலமானது.



முத்துகிருஷ்ணன் என்பவர் பாதிரியார் போல வேஷம் போட்டு பாஜக வேட்பாளர் பொன்னாருக்காக பிரச்சாரம் செய்துள்ளார். 

இப்படி ஏமாற்று வேலை செய்த ஆளுக்கு மக்கள் நல்ல மரியாதை கொடுத்து விட்டார்கள் என்பது வேறு விஷயம்.

இப்படி மோசடி செய்துதான் பாஜக பிழைப்பை நடத்த வேண்டி உள்ளது.

இதற்குப் பதிலாக பாஜக
..........................
அந்த எழவை எதுக்கு நான் என் வாயால சொல்லனும் !!!

4 comments:

  1. தோழர் லீலாவதி யை கொலைசெய்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர் நல்லமருது. பின் திமுக ஆட்சியில் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார்( ?) . இவருடைய சகோதரர் தான் திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கும் எஸ்ஸார் கோபி. இவர் மீதும
    தா.கிருட்டிணன் கொலை வழக்கு, நில அபகரிப்பு வழக்குகள், ஆயுதம் வைத்திருந்த வழக்கு, மதுரை வில்லாபுரம் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கு என வழக்குகளின் பட்டியல் நீளமானது.
    இவரை சந்தித்து தான் வெற்றி பெற ஆதரவு கேட்டிருக்கிறார் சு. வெங்கடேசன்...
    பாவம் தோழர் லீலாவதி.. மக்களுக்காக போராடி உயிரை இழந்துவிட்டார்.
    கொலைகாரர்களுடன் கரம்கோர்த்து பதவி புகழடைய அவரும் இலக்கியம் , கம்யூனிசம் கற்று வாழ்ந்திருக்கலாம்...

    ReplyDelete
  2. சாதி/வாரிசு அரசியல் கணக்குகள் பார்க்காமல் எந்த கட்சியாவது சீட்டு கொடுத்து இருக்கின்றதா?
    ஏன் இல்லை. சிபிஎம் இருக்கிறதே. தமிழ்நாட்டில் தான் போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் ஒன்றை தெலுங்கருக்கும், மற்றொன்றை மலையாளிக்கும் ஒதுக்கியிருக்கிறதே!
    திங்க் பாஸிட்டிவ் ப்ரோ.

    ReplyDelete
  3. எழுதின் பிரச்சினைக்கு பதில் சொல்ல துப்பில்லாத, கையாலாகாத் ஜென்மங்கள் எல்லாம் திசை திருப்புகிறது

    ReplyDelete
  4. ஆள் மாறாட்ட் மோசடியை பாஸிட்டிவா பாக்கனுமா? அண்ணே அறிவோடத்தான் பேசறீங்களா?

    ReplyDelete