Tuesday, April 16, 2019

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?


கீழே நீல நிறத்தில் உள்ளது வாட்ஸப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு தகவல். 

பகிர்ந்து கொண்டவர் மோடி அபிமானி. அதனால் இது ஃபேக் செய்தி என்று சொல்ல முடியாது. அதிலே குறிப்பிடப்பட்டிருந்த தொலை பேசி எண்களை மட்டும் பதிவிலிருந்து அகற்றியுள்ளேன்.

இது போல இலவச வாகனம் ஏற்பாடு செய்வது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது. அப்படி இருந்தும் வெளிப்படையாக செய்தி அனுப்புகிறார்கள் என்றால் 

இதனை வெறும் விதி மீறல் என்றோ ஊழல் நடவடிக்கை என்று மட்டும் சொல்ல முடியுமா?

மத்தியில் ஆட்சியில் உள்ளோம், தேர்தல் ஆணையமே நாம் ஆட்டுவிக்கிற் பொம்மை, நம்மை யாரால் என்ன செய்ய முடியும் என்ற ஆணவத்தைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?


சென்னையில் தங்கி இருக்கும் குமரி மாவட்ட பா ஜ க மற்றும் சங்க நண்பர்களுக்கு 18ம் தேதி வாக்களிப்பதற்க்கு வசதியாக 17ம் தேதி இலவச பேருந்து வசதி செய்யபட்டுள்ளது.... 

சென்னை to மார்த்தாண்டம்..

யாராவது வருவதாக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்  Krishna - Aravid -

இந்த தகவலை அந்த இருவரின் தொலை பேசி எண்களோடு தமிழக தேர்தல் ஆணையருக்கு ஒரு புகாராக மின்னஞ்சலில்  அனுப்பியுள்ளேன்.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?
பாஜகவின் அத்து மீறலை தடுத்து நிறுத்துமா?

1 comment:

  1. தேர்தல் விதிப்படி வாக்குப் பதிவு நாளன்றுதான் வாக்குச் சாவடிக்கு வாகனங்களில் வாக்காளர்களை ஏற்றி வரக்கூடாது.இதில் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

    ReplyDelete