முன்னாடியே சொல்லியிருக்கனும் மோடி
“அபிநந்தனை
விடுவிக்காவிட்டால் தீவிரமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்”
என்று பாகிஸ்தானை மிரட்டியதாக
இப்போது
தேர்தல் கூட்டங்களில் வீர வசனம் பேசுகிற திருவாளர்
மோடி அவர்களே
இப்படி
வீர வசனம் பேசியதாக நீங்கள் எப்போது சொல்லி இருக்க வேண்டும் தெரியுமா?
அபிநந்தன்
பாகிஸ்தான் எல்லையில் சிக்கியவுடன் இவ்வாறு நான் பாகிஸ்தானை மிரட்டியுள்ளேன். என் மிரட்டலுக்கு
பயந்து பாகிஸ்தான் அவரை விடுவித்து விடும் என்று சொல்லி இருக்க வேண்டும்.
அபிநந்தன்
விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்பியவுடனாவது
என் மிரட்டலுக்கு பயந்தே பாகிஸ்தான் அவரை விடுவித்ததே தவிர இம்ரான்கான் கூறியபடி
நல்லெண்ண நடவடிக்கையெல்லாம் இல்லை என்று சொல்லி இருக்க வேண்டும்.
எதிரியின்
கருணையில் உயிர் வாழ்வதை விட செத்துப் போவதே மேல், சக்தி மிக்க ஒரு தலைவரை அணைத்து
விட்டீர் [ தர்ம சங்கடப் படுத்தி விட்டீர். (பழைய இணைப்பு இங்கே உள்ளது)] என்று உங்களின் ஒரு கைத்தடி பொங்கிய போதாவது “எதிரியின்
கருணையினால் வரவில்லை, என்னுடைய மிரட்டலால்தான் விடுவிக்கப்பட்டார்” என்று அவரை சாந்தப்
படுத்தி இருக்க வேண்டும்.
அப்போதெல்லாம்
வாய் திறக்காமல் இப்போ பேசறீங்களே?
இதானா
உங்க டக்கு?
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete