Saturday, April 20, 2019

தலைமை நீதிபதியா இருந்தா என்ன?????


தலைமை நீதிபதியை சிக்க வைத்துள்ளார்களா?

“இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளது”

என்ற கலைஞர் வசனம் மிகவும் பொருந்துகிற வழக்கு தலைமை நீதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் வழக்கு.

தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே கிடையாது, அது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயாக இருந்தாலும் சரி.

ஆனால் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கா என்ற சந்தேகம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

உச்ச நீதிமன்ற பதிவாளரின் அறிக்கை ஒரு காரணம்

தலைமை நீதிபதி மீது சொல்லப்பட்டுள்ள புகார் என்பது பொய்க்குற்றச்சாட்டு. தலைமை நீதிபதியின் வீட்டு அலுவலகத்தில் எப்போதும் ஆறிலிருந்து ஏழு ஊழியர்கள் எப்போதும் இருப்பார்கள். மேலும் புகார் சொன்ன ஊழியரை தலைமை நீதிபதி சந்திக்க வேண்டிய அவசியமே கிடையாது. அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பழி வாங்குவதற்காக இப்படி செய்துள்ளார், அவர் மட்டுமே காரணம் என சொல்ல முடியாது. அவரை ஏதாவது சக்திகள் பின்னிருந்து இயக்க வாய்ப்பு உள்ளது.

தலைமை நீதிபதி நீதி மன்றத்தில் கூறியது.

இருபது வருட பணிக்காலத்திற்குப் பின்னும் கூட என்னுடைய வங்கிக் கணக்கில் ஆறு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது. என்னை பணத்தால் விலைக்கு வாங்க முடியாது என்பதால் இப்படிப்பட்ட வழியை கையாளுகிறார்கள். அடுத்த வாரம் சில முக்கியமான வழக்குகள் வர உள்ளது. அதிலிருந்து என் கவனத்தை திசை திருப்பப் பார்க்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலைமை நீதித்துறைக்கு மிகவும் ஆபத்தானது. நீதித்துறையின் சுதந்திரம் கேள்விக்குறியாக்கப் படுகிறது. இப்படி எல்லாம் நெருக்கடிகள் கொடுத்தால் நல்லவர்கள் யாரும் நீதிபதி பொறுப்பிற்கு வர மாட்டார்கள்.

நான் பதவி ஓய்வு பெறுகிற வரை யாருக்கும் அஞ்சாமல் எந்த பாரபட்சமும் இல்லாமல் செயல்படுவேன்.

சொஸிஸ்டர் ஜெனரலின் கூற்று

இது மிகவும் அபத்தமான குற்றச்சாட்டு. வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும்.


ஆனால்

அதே நேரம்

அரசின் அட்டர்னி ஜெனரலான கே.கே.வேணுகோபாலோ

“நானும் இந்த நீதிமன்றத்தின் அதிகாரிதான். அரசாங்கத்தின் பக்கம் நான் நிற்பதால் நான் தாக்குதலுக்கு உள்ளாகிறேன்”

என்று சொல்கிறார்.

பிரச்சினைக்கு சம்பந்தமே இல்லாமல், அவர் மீது எந்த புகாரும் இல்லாத போது, அவரும் யார் மீதும் எந்த புகாரும் சொல்லாத போது இப்படி கூற வேண்டிய அவசியமென்ன?

திசை திருப்பும் முயற்சியா?

தலைமை நீதிபதி மீது அரசும் கார்ப்பரேட்டுகளும் மிகவும் கோபத்தில் இருப்பதற்கான வாய்ப்புக்கள் ஏராளம்.

நீதித்துறை தன் சுயேட்சைத்தன்மையை இழந்து வருகிறது, வெளிப்படைத் தன்மை இல்லை என்று பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்து குற்றம் சுமத்திய நான்கு நீதிபதிகளில் இவரும் ஒருவர்.

ரபேல் விவகாரத்தை மூடி மறைக்க மத்தியரசு செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இவர்தான். கடுமையான கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்.

அனில் அம்பானி மீதான அவதூறு வழக்கில் அவர் நீதி மன்றத்திற்கு வர வேண்டிய அவசியம் கிடையாது என்று தீர்ப்பிற்கு மாறான தகவலை உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் மோசடியாக திருத்தியவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்தவரும் இவரே.

போலி எண்கவுன்டர் வழக்கில் ஒத்து வராத நீதிபதி லோயாவை போட்டுத் தள்ளிய கூட்டம் எது வேண்டுமானால் செய்யும் என்பதை நாம் மறக்கக் கூடாது.

தலைமை நீதிபதி வாய் திறக்க வேண்டிய காலகட்டம் இது. தன்னை விலை பேச முயற்சித்தவர்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அப்போதுதான் நீதித்துறையை பாதுகாக்க முடியும்.

No comments:

Post a Comment