Friday, April 12, 2019

இதெல்லாம் ஊழலா, நோ, நோ

ஆர்.எஸ்.எஸ் பவனாகும் ஐ.ஐ.டி கள்

சென்னை ஐ.ஐ.டி யில் செயல்பட்டுக் கொண்டிருந்த அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்து மோடி அரசு தான் ஒரு பாசிச அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் கொண்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் - இருவருமே காவிக் கூட்டத்தால் வெறுக்கப்படுபவர்கள். காவிக் கூட்டத்தின் மேலாதிக்க சதிகளை அம்பலப் படுத்தியவர்கள் என்பதால் இருவருமே பரம வைரிகள். ஆகவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இருவரையும் இழிவு படுத்த காவிக்கூட்டம் தயங்காது.

மோடியை விமர்சனம் செய்தார்கள் என்பது ஒரு சாக்காக இருக்க முடியுமே தவிர அவர்கள் உள் மனதில் ஒளிந்து கொண்டிருப்பது  ஆர்.எஸ்.எஸ் சின்  சிந்தனைக்கு எதிரானவர்களை இருட்டடிப்பு செய்வதுதான். 

சாதாரணமாகவே அவர்களின் குணம் இதுதான் என்கிற போது ஆட்சி கையில் இருக்கிற ஆணவத்தில் என்ன வேண்டும் செய்யலாம் என்ற ஆட்டத்தின் ஒரு பகுதிதான் இது.

ஐ.ஐ.டி யில் இவர்களின் முதல் அராஜக நடவடிக்கை இதுவல்ல என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

ஏற்கனவே ஒரு ஆர்.எஸ்.எஸ் பேர்வழியின் கடிதத்தின் அடிப்படையில் அசைவ உணவு பறிமாறுவதை நிறுத்துங்கள் என்று உத்தரவு வழங்கிய அரசுதான் இது.

இனி ஐ.ஐ.டி வளாகத்தில் யாரும் சாப்பிடுவதற்குக் கூட வாய் திறக்கக் கூடாது என்று உத்தரவு போட்டால் கூட ஆச்சரியப் படுவதிற்கில்லை.

ஆனால் அவர்கள் எதிர்பாராத ஒரு விஷயம் என்னவென்றால் இந்த பாசிச முடிவிற்கு எதிராய் நாடு முழுவதும் எழுந்துள்ள கண்டனக் குரல்கள். சுயமாய் சிந்திக்கும் மனிதர்கள் அனைவரும் பொங்கி எழுந்துள்ளனர். பெரும்பாலான அமைப்புக்கள் கண்டனக்குரல் எழுப்பியதோடு நிற்காமல் போராட்டங்களையும் துவக்கியுள்ளனர். அப்படி ஒரு கண்டனச் செய்தியை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



பாசிச ஹிட்லருக்கு வரலாற்றில் என்ன மோசமான பெயர் கிடைத்துள்ளதோ அதை விட மோசமான பெயர் மோடிக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மோசமான கறுப்புக் காலம் மோடியின் ஆட்சிக்காலம்தான். 

இதெல்லாம் ஊழலா, நோ, நோ


இந்தியா மங்கோலியாவுக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் தரும்.
ம்ங்கோலியா அந்த ஆறாயிரம் கோடி ரூபாயை மோடியின்
நண்பர் அதானிக்கு தரும்.

இப்படி பணம் கைமாறுவதெல்லாம் ஊழலா?

சே, சே அப்படியெல்லாம் சொல்லாதீங்கப்பா,

இதெல்லாம் வணிக தந்திரம்
                           வளர்ச்சி மந்திரம்

துணை ஜனாதிபதியாய் திரு ஹமீது அன்சாரி இருப்பதால்தானே?



 http://www.news786.in/news/artimg/17325_1.jpg




உலக யோகா தின நிகழ்ச்சிகளில் குடியரசுத் துணைத்தலைவர் திரு ஹமீது அன்சாரி கலந்து கொள்ளவில்லை என்பதால் அவரைத் தாக்கியும் ராஜ்யசபை டிவி யோகா தின நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யவில்லை என்று புகார் கூறி மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் ராஜ்யசபா டிவி யோகா தினத்தை இருட்டடிப்பு செய்த்தாக குற்றம் சுமத்தி அதனைக் கண்டித்த கருத்துக்களையும் பாஜக பொதுச்செயலாளரும் முக்கிய ஆர்.எஸ்.எஸ் தலீவருமான ராம் மாதவ் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

துணை ஜனாதிபதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் யோகா நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று தெரிந்ததால் தனது பதிவை நீக்குவதாகவும் துணை ஜனாதிபதி என்ற அரசியல் சாசனப் பதவி மதிக்கப்பட வேண்டும் தனக்குத் தானே உபதேசம் கூறி இன்னொரு பதிவும் எழுதினார். பிறகு அந்த பதிவும் நீக்கப்பட்டு விட்டது.

துணை ஜனாதிபதி திரு ஹமீது அன்சாரி அவர்களுக்கு உடல் நலக் குறைவு எதுவும் கிடையாது என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு தரப்படாததால்தான் அவர் பங்கேற்கவில்லை என்று அவரது அலுவலகம் தெளிவு படுத்தி விட்டது. பிரதமர் தலைமை விருந்தினராக பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு ஜனாதிபதிக்கோ அல்லது துணை ஜனாதிபதிக்கோ அழைப்பு அளிக்கும் மரபு கிடையாது என்று பாஜக அமைச்சரே விளக்கம் கொடுத்து விட்டார்.
  
அதே போல ராஜ்ய சபை டி.வியில் யோகா தின நிகழ்வுகள் முழுமையாக ஓளிபரப்பானது என்பதுதான் உண்மை.

ஆக காவிப்படை ராம் மாதவ் அவசியமற்ற பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார் என்பது ஆணித்தரமாக நிரூபணமாகிறது. இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. சங் பரிவாரக் கூட்டத்தின் பிழைப்பே இதுதான். சிறுபான்மை மக்களுக்கு எதிராக நச்சைக் கக்குவதற்கே உலா வருகிற விஷ ஜந்துக்களால் வேறு எப்படி செயல்பட முடியும்? 

பொய் சொல்லி ராம் மாதவிற்கு சில கேள்விகள்.

மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் ராஜ்யசபா டி.வி யோகா தினத்தை காண்பிக்கவில்லை என்று பொய் சொல்லி கோபப்படும் ராம் மாதவ் அவர்களே, யோகா தினம் என்ற பெயரில் மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை விளம்பரத்திற்காக செலவழித்ததே, அது யார் பணத்தில்? அது என்ன உங்களது தந்தையின் சேமிப்பா இல்லை மக்களின் வரிப் பணமா?

துணை ஜனாதிபதி கண்டிப்பாக கலந்து கொள்ள யோகா தினம் என்ன சுதந்திர தினமா இல்லை குடியரசு தினமா?

துணை ஜனாதிபதி பதவியை மதிக்க வேண்டும் என்று முதல் பதிவின் போது உங்களுக்கு தெரியாதா?

துணை ஜனாதிபதியாக திரு ஹமீது அன்சாரி இருப்பது உங்கள் கண்களை உறுத்துவதால்தானே அவரை தொடர்ந்து தாக்கிறீர்கள்?

நீங்களோ இல்லை உங்கள் கூட்டமோ எப்போதாவது மத வெறி அற்ற மனிதர்களாக மாறுவீர்களா?  அது இந்த நூற்றாண்டில் சாத்தியமா?

No comments:

Post a Comment