Monday, April 22, 2019

குருமூர்த்தி எனும் பெரும் பொய்யன்


அதிகாரபூர்வமான

ரிசர்வ் வங்கி இயக்குனர்,
துகளக் பத்திரிக்கை ஆசிரியர்,
ஆடிட்டர்

திரை மறைவில்

எடுபிடி அரசை ஆட்டி வைக்கிற,
தலைமைச் செயலாளரை வழி நடத்துகிற
ராஜகுரு என்று நினைப்பு.

ஆனால் இந்த மனிதன் பெரும் பொய்யன்.

சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புகிற சின்னப்புத்தி படைத்த மனிதன்.

உண்மை எது, பொய் எது என்பதை ஆராய்வதற்கான வசதி உள்ள ஒரு பத்திரிக்கை ஆசிரியர் தொடர்ந்து பொய்களை பரப்பிக் கொண்டிருந்தால் வயதுக்குக் கூட மரியாதை கொடுக்க மனது வரவில்லை.

சில மாதங்கள் முன்பாக உச்ச நீதிமன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் புத்தி இன்னும் வரவே இல்லை.

அதே போல தோழர் சீத்தாராம் யெச்சூரியைப் பற்றி அவதூறு பரப்பி அசிங்கப்பட்டார்.

இப்போது புதிதாக ராகுல் காந்தி பற்றி அவதூறு பரப்பி உள்ளார், அதுவும் போலியாக தயாரிக்கப்பட்ட ஒரு செய்தித்தாளை வைத்து.



பிறகு அந்த செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று சொல்லி அதை நீக்கி விட்டார்.



சில மணி நேரத்திற்குப் பிறகு அந்த விளக்கத்தையும் நீக்கி விட்டார்.

தான் பரப்புகிற எந்த பொய்ச்செய்திக்காகவும் சின்ன வருத்தம் கூட தெரிவிக்காத உத்தம பத்திரிக்கையாளர் இவர்.

இவர் பரப்பிய அந்த பொய்ச்செய்தியை அடிப்படையாக வைத்து சங்கிகள் கதை மேல் கதை கட்டத் தொடங்கி விட்டார்கள்.

சோனியா காந்தி வாஜ்பாயிடம் கதறி அழுது கெஞ்சியதால் அவர் தலையிட்டு விடுதலை செய்ய வைத்தார் என்பது அந்த கட்டுக்கதை.

ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது.

காவிகளுக்கு தோல்வி பயம் வந்து விட்டது.

தங்களுடைய சாதனை என்று சொல்ல எதுவும் இல்லாத போது, இவ்வாறு அவதூறுகளை பரப்பியாவது ஆட்சியை தக்க வைக்க முடியுமா என்று முயற்சிக்கிறது. 

இதெல்லாம் ஒரு பிழைப்பு!!


No comments:

Post a Comment