மூன்று நாட்கள் முன்பாக மோடி -போலிப் பிம்பத்தை துதிக்காதீர் என்றொரு பதிவை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சி இது.
மோடியை ஆதரிப்பவர்கள் யார்?
அவர்களின் குணாம்சம் என்ன என்பதை இறுதியில் எழுதி உள்ளேன்.
இந்தியா புறக்கணிக்க வேண்டிய அழிவு சக்தி மோடி என்பதை மறவாதீர்.
மோடி
ஒரு ஜனநாயகவாதியா?
எதிர்க்கருத்துக்களை
முற்றிலுமாக ஒடுக்குபவர், நாடாளுமன்றத்திற்கு வருவதையே சுமையாக கருதுபவர், ஒட்டு மொத்த
ஐந்தாண்டுகளிலும் முப்பது நாட்கள் மட்டுமே அங்கே சென்ற ஒரே பிரதமர். கேள்விகளுக்கு
பதில் சொல்வதை தவிர்ப்பதற்காகவே பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் ஒளிந்து கொள்பவர்,
மாற்றுக் கருத்து சொல்பவர்களை “தேச விரோதிகள்” “பாகிஸ்தானுக்குப் போ” என்று அவரது எடுபிடிகள்
சொல்வதை ஊக்குவிப்பவர், மாற்றுக் கருத்துக்கள் கொண்டவர்கள் கொல்லப்பட்ட போது வேடிக்கை
பார்த்தவர் – இவரை எப்படி ஜனநாயகவாதி என்று சொல்ல முடியும்?
அது
மட்டுமா?
தாங்கள்
வாக்குகள் மூலம் வெற்றி பெறாத மாநிலங்களில் குதிரை பேரம் நடத்தி ஆளுனர்கள் தயவில் கோவா,
மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில்
ஆட்சிக்கு வந்த கதையையும் கர்னாடகத்தில் அடி வாங்கி ஏமாந்த கதையையும் மறந்து
விட முடியுமா? பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமாரோடு ஒட்டிக் கொண்ட சந்தர்ப்பவாத நாடகத்தைத்தான்
மறக்க இயலுமா?
தேச
பக்தரா?
சுதந்திரப்
போராட்டத்தை காட்டிக் கொடுத்த பாரம்பரியத்திலிருந்து வந்தவர் எப்படி ஒரு தேச பக்தராக
இருக்க முடியும்? தேசம் என்பது வெறும் மண்ணல்ல, எல்லைகள் மட்டுமல்ல. மக்கள்தான் தேசம்.
அந்த மக்களை தொடர்ந்து பெரும் துயரத்தில் ஆழ்த்தியவர் எப்படி ஒரு தேச பக்தராக இருக்க
முடியும்?
பொதுத்துறை
நிறுவனங்கள் இந்த தேசத்தின் சொத்துக்கள். தனியார்
பெரு முதலாளிகளின் லாப வேட்டைக்காக தேசத்தின் சொத்துக்களை சீரழிப்பவரை தேச விரோதி என்று
சொல்வதல்லவா பொருத்தமாக இருக்கும்!
எல்லை
காக்கும் வீரர்களுக்கு ஆபத்து இருக்கிறது என்று உளவுத்துறை அறிக்கை இருந்த போதும் தேர்தல்
ஆதாயத்திற்காக நாற்பத்தி ஐந்து வீரர்கள் மடியட்டும் என்று வேடிக்கை பார்த்தவரெல்லாம்
தேச பக்தர் வேடம் போடுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
நாற்பத்தி
ஐந்து வீரர்கள் இறந்து போன செய்தி அறிந்தும் விளம்பரப் படப்பிடிப்பை நிறுத்தாமல் தொடர்ந்ததும்
மறுநாள் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்றதும் ராணுவ வீரர்களை இவர்
ஹெச்.ராஜாவின் ஹைகோர்ட்டாகத்தான் மதித்தார் என்பதை உணர்த்துகிறது.
பெரும்பாலான
அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதில்லை என்ற ஒரு தகவலே உணர்த்தும் மோடி
ஒரு தேச பக்தர் இல்லை என்பதை.
மக்கள்
ஒற்றுமையை விரும்புபவரா?
உத்திரப்
பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலின் போது அவர் அனைத்துக் கூட்டங்களிலும் தவறாது
பேசிய ஒரு விஷயமொன்று உண்டு.
கபரஸ்தான்கள்
( இஸ்லாமியர்களின் இடுகாடு) எல்லாம் ஒளி மயமாக இருக்கிறது. ஆனால் நம் கோவில்கள் கூட
இருள் மண்டிக் கிடக்கிறது. அவர்களுக்கு மின்சாரத்தை அள்ளித்தரும் மாநில அரசு( அகிலேஷ்
யாதவ்) நம்மை புறக்கணிக்கிறது. இதை மாற்ற வேண்டாமா?
ஒரு
பிரதமர் தன் உரையில் அவர்கள், நாம் என்று பிரிவினையைத் தூண்டினால் அவரால் எப்படி மக்கள்
ஒற்றுமையைக் காக்க முடியும்?
அதே
உத்தரபிரதேசத்தில் முசாபர்நகர் கலவரத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்களுக்கு மலர்க் கிரிடம்
சூட்டி அழகு பார்த்தவரும் இவரே!
நேர்மையானவரா?
திருமணம்
செய்து கொள்வதும் மனைவியோடு சேர்ந்து வாழ்வதும் ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால்
முதலமைச்சராக இருக்கும் வரை அவர் என்ன கூறினார்? தான் ஒரு பிரம்மச்சாரி என்றும் அதையே
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் போதெல்லாம் தன் வேட்பு மனுவிலும்
குறிப்பிட்டவர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அவருக்கு திருமணமான தகவல் அம்பலமாகி
விட்டதால் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுவில் முதல் முறையாக தான் திருமணமானவர்
என்பதை குறிப்பிடுகிறார்.
ஒரு
வேளை அந்த உண்மை அம்பலப்படாமல் இருந்திருந்தால் இப்போது கூட “தான் ஒரு பிரம்மச்சாரி”
என்ற வசனத்தை பேசிக் கொண்டிருப்பார்.
டீ
விற்ற கதை, பட்டம் பெற்ற கதை என்று அவரது நேர்மையற்ற குணத்திற்கு இன்னும் ஏராளமான உதாரணங்கள்
இருக்கிறது.
எளிமையானவரா?
பத்து
லட்ச ரூபாட் கோட் போடுபவர், ஒரு நாளைக்கு நான்கு முறை உடை மாற்றுபவர், தைவானிலிருந்து
இறக்குமதி செய்யப்படும் காளானை உண்பவர் போன்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரரை எளிமையானவர்
என்றழைத்து இழிவு படுத்த முடியுமா?
ஊழலற்றவரா?
சில
நாட்களுக்கு முன்பாக எழுதிய பதிவை அப்படியே மீண்டும் அளித்துள்ளேன்.
ஆக
பாராட்டத்தக்க எந்த ஒரு அம்சமும் இல்லாத ஒரு மனிதர் மோடி.
அவர்
நல்லவர் அல்ல.
அவர்
அறிவாளி கிடையாது.
அவருக்கு
பொருளாதாரம் புரியாது.
நிர்வாகத்
திறன் கிடையவே கிடையாது.
ஜனநாயகவாதி
இல்லை.
நேர்மையாளர்
அல்ல.
எளிமை
என்பது கிஞ்சித்தும் கிடையாது.
மூன்றாந்தரப்
பேச்சாளர்.
ஊழல்
பேர்வழி
தேச
பக்தி கிடையாது
மக்கள்
ஒற்றுமையை சீர்குலைப்பவர்.
ஆனாலும்
அவரை கடவுள் ரேஞ்சிற்கு துதிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கற்றாரை
கற்றாரே காமுறுவர்
என்பது
போல இன்னொன்றும் உள்ளதல்லவா!
பாம்பின்
கால் பாம்பறியும்.
அது
போல மோடியைப் போன்ற மோசமான பேர்வழிகளால் மட்டுமே மோடியை ஆதரிக்க முடியும். துதிக்க
முடியும்.
No comments:
Post a Comment