Thursday, May 11, 2023

அவல் கொடுத்திட்டீங்களே முதல்வரே!

 


அமைச்சர்களை நியமிப்பது முழுக்க முழுக்க முதலமைச்சரின் உரிமை என்றாலும் கூட  ஆட்டுக்காரனும் புரோக்கர் சங்கரும் ஆடியோ வெளியிட்ட பின்னணியில்,


பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை நிதித்துறையிலிருந்து மாற்றியது

சங்கிகள் வெறிக்கூச்சலிட  நீங்களே இடம் கொடுத்தது போல அமைந்து விட்டது முதல்வரே! மத்யமர் ஆட்டுக்காரன் குழு பதிவுகளே அதற்கு உதாரணம்.

உங்களின் தேர்தல் வாக்குறுதியான "புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து" அரசு ஊழியர்கள் மத்தியில் பழைய நிதியமைச்சரால் உருவான அதிருப்தியையாவது மாற்றி விடுங்கள். 

No comments:

Post a Comment