அனுமனை
அவமதித்து விட்டார்கள் என்று பொய் சொல்லி மத வெறியை தூண்டி விடும் “வெறும் நரேந்திரா”
சொன்ன இன்னொரு பொய் “ராமரை சிறையில் வைத்தார்கள்” என்ற விஷம்தான் அது.
கடந்த
கால வரலாறு ஏதுமில்லாத. எதிர்கால வரலாற்றில் வெறியர்கள் என்று பதிவாகப் போவதால் “வெறும்
நரேந்திரா” சொல்லியுள்ள இன்னொரு பொய் அது.
நானூறு
ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் மசூதியில்தான் ராமர் பிறந்தார் என்ற கட்டுக்கதையை அடிமை
இந்தியாவிலேயே பரப்பினார்கள். அதே சமயத்தில் கிட்டத்தட்ட ஐம்பது ராமர் கோயில்களின்
பூசாரிகள் தங்கள் கோயிலில்தான் ராமர் பிறந்தார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்
என்பதும் அப்படிப்பட்ட பல கோயில்கள் இன்று சப்தமே இல்லாமல் மூடப் பட்டு விட்டது என்பது
வேறு கதை.
பாபர்
மசூதிக்கு உள்ளே இஸ்லாமியர்கள் வழிபாடு செய்து கொள்ளலாம் என்றும் வெளியே உள்ள பகுதியில் இந்துக்கள் வழிபாடு செய்யலாம்
என்றும் பிரிட்டிஷ் நீதிபதிகள் தீர்ப்பு கொடுத்திருந்தனர்.
சுதந்திர
இந்தியாவில் 1949 ம் வருடம் டிசம்பர் மாதத்தில் அபிராம்தாஸ் என்ற சாமியார் ராமர் சிலையை
திருட்டுத்தனமாக பாபர் மசூதிக்குள் வைக்கிறார், அதன் பின்பு பிரச்சினை எழ, யாரும் செல்ல
முடியாத படி பாபர் மசூதி சீல் வைக்கப்படுகிறது. ஆக பாபர் மசூதிக்குள் ராமர் சிறை வைக்கப்பட்டிருந்தால்
அதற்கு காரணம் அபிராம்தாஸ் என்ற சாமியாரும் அவருக்கு உத்தரவு போட்ட இந்து மகா சபாவுமேதான்.
ராமர்
எப்போது சிறையிலிருந்து ரிலீஸ் ஆனார்? ராஜீவ் எப்படி காரணம்?
அது
இன்னொரு பெரிய கதை.
காங்கிரஸ்
கட்சியின் களங்கப்பட்ட வரலாறு. அதன் சமரச அரசியல்.
தலாக்
செய்யப்பட்ட ஷா பானு எனும் முதிய இஸ்லாமியப் பெண்மணி, தனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என்று
தொடுத்த வழக்கு இறுதியில் உச்ச நீதிமன்றம் வரை சென்று அங்கே அவருக்கு சாதகமான தீர்ப்பு
வருகிறது. இது 1985 ல் நடக்கிறது. இந்திராவின் மரணத்திற்குப் பிறகு மிருக பலத்தோடு
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ராஜீவ் காந்தி பிரதமரான காலம் அது.
இத்தீர்ப்புக்கு
எதிராக இஸ்லாமிய அமைப்புக்கள் போராடுகிறது. அவர்களை சமாதானம் செய்ய உச்ச நீதிமன்றத்
தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யக் கூடிய விதத்தில் ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு
வருகிறார் ராஜீவ் காந்தி.
சிறுபான்மையினரை
தாஜா செய்யும் வேலை இது என்று பாஜக கொடி பிடிக்கிறது.
ஆகவே அவர்களை தாஜா செய்ய, பாபர் மசூதிக்குள் உள்ள ராமர் சிலைக்கு வழிபாடு நடத்த அனுமதி
கொடுத்து மசூதியின் கதவுகளை திறந்து விடுகிறார் ராஜீவ் காந்தி.
பாபர்
மசூதி இடிக்கப்பட்டு அங்கே ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஊக்கம்
கொடுத்ததே ராஜீவ் காந்தி செய்து கொண்ட சமரசத்தின் விளைவுதான்.
அத்வானியின்
ர(த்)த யாத்திரை, டிசம்பர் ஆறு மசூதி இடிப்பு, ஆல மரப் பஞ்சாயத்துக்களைக் காட்டிலும்
மோசமான நீதிமன்ற தீர்ப்பு எல்லாமே அதன் தொடர்ச்சிதான். “வெறும் நரேந்திரா” போன்ற வெறி
பிடித்த மூர்க்கர்கள் பதவிக்கு வர காங்கிரஸ் கட்சி போட்டுக்கொடுத்த ராஜ பாட்டை அது.
ராமர்
கோயிலுக்கு பூமி பூஜை நடந்த நாளன்று காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்தியப் பிரதேச
முதல்வருமான கமல் நாத், ராமர் கோயில் கட்டுவதற்கான பெருமை ராஜீவ் காந்தியையே சாரும்
என்று சொன்னதை நினைவு படுத்திக் கொள்வதும் நல்லது.
ஆகவே
“வெறும் நரேந்திரா” சொன்னது வழக்கமான பொய்தான். . . .
பிகு:
“ராஜீவ் யார் ராமரை ரிலீஸ் செய்ய” என்று சில முட்டாள் சங்கிகள் பொங்கலாம். சிறையிலடைத்தார்
என்ற வார்த்தையை டிமோ பயன்படுத்தி உள்ளதால் ரிலீஸ் என்ற வார்த்தைதான் சரி.
No comments:
Post a Comment