Monday, May 8, 2023

யாரெல்லாம் வெட்கப்பட வேண்டும்?

 


ஊடக சுதந்திரத்தில் இந்தியா 161 ம் இடத்தில் உள்ளது. கடந்த வருடம் 150 வது இடத்தில் இருந்து இப்போது பின்னேறி 161 வது இடத்திற்கு வந்துள்ளது.

இதற்கு யாரெல்லாம் வெட்கப்பட வேண்டும்?

முதலில் வெட்கப்பட வேண்டியது இப்படிப்பட்ட சூழலை உருவாக்கியுள்ள ஒன்றிய அரசு. உருட்டல், மிரட்டல் மூலமாக தங்களுக்கு எதிரான செய்திகள் வெளி வராமல் பார்த்துக் கொள்வது ஒன்றிய அரசு.

அடுத்து ஊடக முதலாளிகள் வெட்கப்பட வேண்டும்.

அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே செயல்படுத்துகிற, ஒரு சின்ன விமர்சனம் கூட இல்லாமல் பார்த்து பக்குவமாக நடந்து கொள்கிறார்கள். அர்ணாப் போன்றவர்களோ அரசுக்கு ஆதரவாக காட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தவறான செய்திகளை தெரிந்தே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவதாக ஊடகவியளாளர்கள்.

முதலாளிகளின் கட்டளைகளுக்கு அடி பணிந்து மன சாட்சியை அடகு வைத்து ஆட்டுக்காரன் போன்றவர்களிடம் பம்மி தோழர் திருமாவளவன் போன்றவர்களிடம் எகிறும் வீராதி வீர, சூராதி சூரர்கள். செய்திகளை கவர்களின் கனத்தின் அடிப்படையில் கவர் செய்பவர்கள்,

விதிவிலக்குகள் உண்டு.

ஆனால் இந்திய ஊடகம் இன்று பெருமளவில் ஊழல் மயமாகி விட்டது. பிறகு கடைசி இடத்திற்கு போகாமல் முதலிடத்திற்கா வரும்!

No comments:

Post a Comment