Saturday, May 27, 2023

செங்கோலில் எந்த புண்ணாக்கு பெருமையுமில்லை


 தமிழ்நாட்டின் கலாச்சார பெருமையாக செங்கோல் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்படும் என்று சங்கிகள் பில்ட் அப் செய்து கொண்டு இருக்கிறார்கள். 

ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் மவுண்ட் பேட்டனால் நேருவிடம் கொடுக்கப்பட்டது என்ற கட்டுக்கதை ஆட்டுத்தாடி ரவி தொடங்கி அமித் ஷா வரை பரப்பப்பட்டுள்ளது. அந்த கதை ஒரு பொய் என்பதை ஆதாரங்களோடு வெளியான ஒரு கட்டுரையை மாலையில் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த செங்கோல் என்பது ஆட்சி மாற்றத்தின் அடையாளம் என்பதே ஒரு மிகப் பெரிய பொய்.

மன்னராட்சியின் தொடர்ச்சியின் அடையாளம்தான் மகுடம், செங்கோல் போன்றவைகள்.

முடியாட்சியின் அடையாளத்தை குடியாட்சியின் அடையாளம் என்று சொல்வதே வழக்கமான டிமோ பாணி பித்தலாட்டம்தான். 

தான் இந்தியாவின் மன்னன் என்று காண்பிக்கும்  டிமோ அற்பத்தனமான ஆசை மட்டுமே.

அதனால் இதில் எந்த புண்ணாக்கு பெருமையுமில்லை. 

பிகு: மேலே உள்ள படம் புரியாதவர்கள், யூட்யூபில் ரஜினிகாந்த் நடித்த தில்லுமுல்லு படத்தின் இண்டர்வியூ காட்சியை பார்க்கவும். 

2 comments:

  1. டிமோ நடத்தும் நாடகத்திற்கும், நீங்கள் குறிப்பிட்ட திரைப்பட பெயருக்கும் சம்பந்தம் இல்லையே?

    ReplyDelete
    Replies
    1. அந்த காட்சியில் சட்டையில என்ன பொம்மை என்று தேங்காய் சீனிவாசன் கேட்க, அந்தகேண்டிடேட் பூனை என்று சொல்ல, இதிலென்ன பெருமை என்று திட்டி வெளியே அனுப்புவார். இப்போது மேலே உள்ள படத்தில் சட்டையை பார்க்கவும். அப்புறம் டிமோன்னாலே தில்லுமுல்லுதானே!

      Delete