ரூபாய்
2000 நோட்டுக்கள் இனி செல்லாது என்ற அறிவிப்பிற்கு சங்கிகள் கொடுக்கிற முட்டுக்கள்
இருக்கிறதே, முடியலை. தாங்கள் கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பதை ஒவ்வொரு முட்டிலும்
நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சங்கிகளின் சில முட்டுக்களையும் அதற்கான என் எதிர்வினைகளையும் பார்ப்போம்.
முட்டு : 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று சொல்லவில்லை, அது புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுகிறது.
எதிர்வினை: இனி 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்பதால்தானே திரும்பப் பெறப்படுகிறது. வங்கிகளில் 30.09.2023 க்குள் செலுத்தி மாற்றிக் கொள்ளச் சொன்ன ரிசர்வ் வங்கி அதுவரை மக்கள் மற்ற இடங்களில் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏன் சொல்லவில்லை? 30.09.2023 க்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டை யாராவது வைத்திருந்தால் அந்த நோட்டிற்கு ஏதாவது மதிப்புண்டா? ஆக அது வெறும் செல்லாத நோட்டுதான்.எதற்கு வெட்டித்தனமான வார்த்தை விளையாட்டு?
முட்டு : ; CLEAN NOTE POLICY என்று அழுக்கு நோட்டுக்களின் சுழற்சியை தடுக்கத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
எதிர்வினை : அடப்பாவிகளா! 2000 ரூபாய் நோட்டுக்களில் மட்டுமா அழுக்கு நோட்டு இருக்கிறது! டிமோ கலர் கலராக வெளியிட்ட எல்லா ரூபாய் நோட்டுக்களும்தான் அழுக்கோ அழுக்கு என்றுள்ளது. பிறகு ஏன் அதையெல்லாம் ரிசர்வ் வங்கி திரும்பப் பெறவில்லை. அழுக்கு நோட்டுக்களை திரும்பக் கொடுத்து விட்டு வேறு புதிய நோட்டுக்களையோ அல்லது வேறு மதிப்பிலான நோட்டுக்களை கொடுக்கலாமா! ஒட்டு மொத்தமாக 2000 ரூபாய் நோட்டுக்களையே திரும்பப் பெற வேண்டாமே!
முட்டு : கள்ள நோட்டுக்களை அச்சிடுவது எளிதாக உள்ளது என்பதாலும் இந்த முடிவு
எதிர்வினை : கள்ள நோட்டு அடிக்க முடியாத என்றுதானே பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காரணம் சொன்னார்கள். ஒரு ரூபாய் போட்டை கூட ஒழுங்காக அச்சடிக்க லாயக்கில்லாதவர்களுக்கு ஏன் ஆட்சி?
முட்டு : கறுப்புப் பணத்தை தடுக்கவே இந்த நடவடிக்கை. 2000 ரூபாய் நோட்டை பதுக்கி வைத்தவர்கள் எல்லாம் இப்போது சிக்கிக் கொள்வார்கள். 2000 நோட்டை அறிமுகப்படுத்தியதே கறுப்புப் பணம் உள்ளவர்களை தூண்டி அவர்களை பதுக்க வைத்து இப்போது வெளியில் கொண்டு வரத்தான்.
எதிர்வினை : கொக்கின் தலையில் வெண்ணையை வைத்து சூரியனின் சூட்டில் அந்த வெண்ணை உருகி நெய்யாக வழியும் போது கொக்கின் கண்களை அந்த நெய் மூடும் போது கொக்கை பிடித்து விடலாம் என்று கொக்கை பிடிக்க யோசனை சொன்ன ஆளுக்கு டிமோ வை விட அறிவு அதிகம்.
முட்டு : முதல்வர் குடும்பத்தினர் சேர்த்து வைத்துள்ள 30,000 கோடி ரூபாய்க்கு ஆப்பு வைக்கத்தான் இந்த முடிவே.
எதிர்வினை : ஆட்டுக்காரன் வெளியிட்ட தரகர் சங்கர் கொடுத்ததாக சொல்லப்பட்ட ஆடியோ போலியானது என்று பிடிஆர் தியாகராஜன் சொன்னாலும் அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது ஒரு புறம் இருக்கட்டும், அது உண்மையாகவே இருந்தாலும் அந்த 30,000 கோடி ரூபாயை 2000 ரூபாய் நோட்டுக்களாகவே பதுக்கி வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதே! அது முட்டாள் டிமோவின் முட்டாள் தொண்டர்கள் என்பதற்கான சான்று.
முட்டு : கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் இந்த நடவடிக்கைக்காக கதறுகிறார்கள். அரசின் முடிவை விமர்சிக்கிறார்கள்.
எதிர்வினை : 2000 ரூபாய் நோட்டுக்களாக கறுப்புப் பணம் உள்ள பெரும் பண முதலைகள் யாரும் கதறவில்லை. அதை மாற்றும் தொழில் நுட்பம் அவர்களுக்கு தெரிந்திருக்கும். முன்பு கமிஷன் அடிப்படையில் மாற்றிக் கொடுத்ததை புதிய வித பொருளியல் நடவடிக்கை என்று புளிச்ச மாவு ஆஜான் சொன்னது நினைவில் உள்ளது. நானெல்லாம் 2000 ரூபாய் நோட்டை பார்த்தே இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனாலும் நான் கடுமையாக விமர்சிக்கிறேன்.
ஏன்?
1000 ரூபாய் நோட்டை செல்லாத நோட்டாக்கி விட்டு 2000 ரூபாய் நோட்டை கொண்டு வந்தது ஒரு தேவையில்லாத ஆணி என்று அன்றே சொன்னேன். அந்த தேவையில்லாத ஆணியை இப்போது பிடுங்கும் போது “ நாங்கதான் அப்பவே சொன்னோம் கேட்டியா?” என்று இந்தியாவுக்கே தேவையில்லாத பெரிய ஆணியான டிமோவை கேட்கும் வாய்ப்பை எப்படி நழுவ விட முடியும்!
No comments:
Post a Comment