Wednesday, May 31, 2023

என்னமா புளுகறானுங்க!

 


"மத்யமர்  ஆட்டுக்காரன்" குழுவில் நான் இருப்பதே அங்கே சங்கிகள் அடித்து விடும் கட்டுக்கதைகளை அறிவதற்கே.

இங்கே ஒரு சங்கியின் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டும் அந்த பதிவுக்கு ஆதாரமாக கொடுத்துள்ள கல்வெட்டும்.





15, ஆகஸ்ட், 1947 அன்றே பதியப்பட்ட கல்வெட்டு என்று அவர் சாதிக்கிறார். கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்ட சீர்திருத்த தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ள நேரு, ஆதீனம் படங்களும் கம்ப்யூட்டர் டிசைன் என்பதையும் சமீபத்தில் கிரானைட் கல்லில் தயார் செய்யப்பட்டது என்பதைக் காண்பிக்கிறது. சமீபத்திய இடைச்செருகல் என்று தெளிவாக தெரிகிறது.

மேலும் மவுண்ட்பேட்டனிடம் கொடுத்ததாக சொல்லப்படுவது பொய் என்பதை தகர்க்க எந்த ஒரு வாசகமோ இந்த கல்வெட்டில் இல்லை. 

ஆனாலும் கூசாமல் புளுகிக் கொண்டே இருக்கிறார்.

பங்குனி உத்திர கோயில் குள விபத்தில் ஐவர் இறந்த போது, "அவர்கள் இறந்தது புண்ணியம்" என்று பதிவு போட்ட ஆசாமிதான் இந்தாள். அதை அந்தாளின் ஒவ்வொரு பதிவிலும் குத்திக் காட்டினாலும் துடைத்து விட்டு பொய்களை பரப்பிக் கொண்டிருக்கிறான். அதை நம்பவும் ஆட்கள் இருக்கிறார்கள். 

எல்லா சங்கிகளும் தாங்கள் அசிங்கப்படுவது பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் பொய்ப்பிரச்சாரத்தை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.  அதை நம்பும் மூடர்களின் எண்ணிக்கை அதிகம்.

இதை எப்படி சமாளிக்கப் போகிறோம்?

ஜனநாயக சக்திகள் முன் இக்கேள்வியை வைக்கிறேன்.

எப்படி? 

No comments:

Post a Comment