வேலூர் மாவட்டத்தின் மக்கள் தலைவரும் குடியாத்தம் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினருமாகவும் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் கே.ஆர்.சுந்தரம் அவர்களின் நூற்றாண்டு பற்றி நேற்று முன் தினம் எழுதியிருந்தேன்.
மழை காரணமாக கூட்டம் தொடங்கி சிறிது நேரமான பின்பே செல்ல முடிந்தது.
அரங்கத்தின் உள்ளே நுழைந்த போது ஒரு வாலிபர் ஏதோ வரைந்து கொண்டிருந்ததை கவனித்தேன்.
அதன் பின்பு ஒரு அரை மணி நேரம் கடந்திருக்கும். ஓவியம் முடிந்து விட்டது.
நீங்கள் மேலே பார்த்த சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் கே.ஆர்.எஸ் அவர்களின் ஓவியம்தான் அவர் லைவ்வாக வரைந்த அந்த ஓவியம்.
மருந்துவியல் முதலாண்டு படிக்கும் ஸ்ரீகாந்த் என்ற இந்த வாலிபர்தான் அந்த இளம் கலைஞர். கை கொடுத்து பாராட்டினேன். கதவடைப்பு காலத்திலிருந்துதான் ஓவியம் வரைய ஆரம்பித்ததாகச் சொன்னார்.
அபாரம்!
மக்கள் கூடியிருக்க, படு வேகமாகவும் அதே நேரம் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் வரைந்த இளம் கலைஞர் ஸ்ரீகாந்திற்கு பாராட்டுக்கள். மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
பேரன்பு ஸ்ரீகாந் இவர் என்.சங்கரய்யா நூற்றாண்டை ஒட்டி காட்பாடியில் நடந்த பொது நிகழ்வில் என்.எஸ் படத்தையும் வரைந்து பிரம்மிக்க வைத்தார் வாழ்த்துக்கள் தம்பி இன்னும் உச்சத்தை தொடட்டும் உங்கள் ஓவியங்கள்
ReplyDelete