நரேந்திரன் நடத்திய குஜராத் கலவரத்தின் போது பல்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வன் புணர்ச்சிக்கு உள்ளாக்கி அவரது குடும்பத்தையே கொலை செய்த பாவிகளை முன் கூட்டியே "நன்னடத்தை" காரணமாக விடுதலை செய்ததை எதிர்த்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
அதற்கான கோப்புக்களை அனுப்ப ஏற்கனவே குஜராத், ஒன்றிய அரசுகள் முரண்டு பிடிக்கின்றன.
குற்றவாளிகள் இறுதி விசாரணைக்கு முன்பாக வாய்தா கேட்க நீதிபதி திரு கே.எம்.ஜோசப் வெடித்துள்ளார்.
"ஜூன் மாதம் 16 ம் தேதி என்னுடைய ஓய்வு நாள். கோடைக்கால விடுமுறை வருவதால் மே மாதம் 19 ம் தேதிதான் என்னுடைய இறுதி பணி நாள். நான் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த வேலையெல்லாம் நடக்கிறது"
ஆம்.
முற்றிலும் உண்மைதான் சார்.
உங்களை அவர்களுக்கு பிடிக்காது. நீங்கள் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.
ஆம்.
அவர்கள் எதையும் செய்வார்கள்
No comments:
Post a Comment